Malaysia

“Golden Empire சாதனை பெண்கள் 2025” விருது விழா 10 சாதனை பெண்கள் கௌரவிக்கப்பட்டனர் ஏற்பாட்டாளர் கலைமாமணி மகேந்திரன் நடராஜா தகவல்

ஜொகூர் பாரு, மார்ச் 19-
Golden Empire நிறுவனத்தின் ஏற்பாட்டில் “Golden Empire சாதனை பெண்கள் 2025” எனும் விருது விழா ஜொகூர் பாரு விழா மிகவும் சிறப்பாக நடந்தேறிய நிலையில் இந்த விருது விழாவில் 10 சாதனைப் பெண்கள் கௌரவிக்கப்பட்டதாக
ஏற்பாட்டாளர் கலைமாமணி மகேந்திரன் நடராஜா கூறினார்.

இந்த “Golden Empire சாதனை பெண்கள் 2025” கௌரவிப்பு விருது விழா நிகழ்வை முன்னாள் செனட்டர் புவான்ஸ்ரீ் சரசா பாசமாணிக்கம் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். மேலும் சில முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது. இந்த விருது விழா ஜொகூர், செனாய் வட்டாரத்தில்
சிறந்த பெண்களின் சிறப்பையும் சாதனைகளையும் கொண்டாடும் ஒரு நிகழ்வாக கடந்த மார்ச் 16ஆம் தேதி இரவு செனாயில் உள்ள இம்பியானா ஹோட்டலில் வெற்றிகரமாக ஏற்பாடு செய்ததாக மகேந்திரன் தெரிவித்தார்.

இந்த “Golden Empire சாதனை பெண்கள் 2025” விருது விழாவில் சமூகத்திற்கு சிறப்பான பங்களிப்பை வழங்கிய 10 தனிச்சிறப்புமிக்க பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் விளையாட்டு துறையில் சிறந்து விளங்கி வரும் திருமதி ஆர்.டி. இசா தனலெட்சுமி, கேக் அகாடமி நிறுவனர் திருமதி பாரதி, திருமதி பவானி,ஒப்பனை துறையில் நிபுணத்துவம் பெற்றதிருமதி ஆதிலெட்சுமி,அலங்கார நிறுவன நடத்துநர் திருமதி கான மேரி, திருமதி ஜெயந்தி, டத்தின் Dr திலகவதி, பரநாட்டிய துறையில் சிறந்து விளங்கும் ஸ்ரீமதி செல்வநாயகி, திருமதி சிவாலீலா, நடனத்துறையில் தேர்ச்சி பெற்ற மாஸ்டர் திருமதி கலா முருகன் ஆகியோர் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.

இதில் மாற்றுத் திறனாளிகள் மூவருக்கு அவர்களின் மன உறுதியை அங்கீகரித்து விருதுகள் வழங்கப்பட்டன. திருமதி கவிதா, திரு.கபிலன், திரு.கேவசராவ் ஆகிய மூவருக்கு சிறப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

இந்த விருது விழாவில் மகேந்திரன் தாயார் திருமதி தனலெட்சுமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவருக்கு சிறப்பு செய்யப்பட்டது இந்த “Golden Empire சாதனை பெண்கள் 2025” விருது விழா விருந்துடன் மயிலாட்டம் உள்ளிட்ட பாரம்பரிய நடனங்களுடன் ஆடல், சிறப்புரை என்று பல்வேறு அம்சங்களுடன் சிறப்பாக நடந்தேறியது.

இந்த விருது விழாவில் புவான் ஸ்ரீ சரசா பாசமாணிக்கம், டத்தோ சுகுமாறன் ராமன், டத்தோ கே.புருஷோத்தமன், டத்தோ தென்னரசு, சுப்பையா, டத்தோ டூத்தா Dr A.சந்திரன், மோனா லோய், ரகுசெங்கோடன், கநந்தகுமார் நடராஜா, சிவக்குமார் பக்கிரிசாமி, தமிழ்செல்வன் நடராஜா, வேலம்மாள் கருப்பண்ணன் ஆகியோர் கலந்து கொண்டு கேடயம், நற்சான்றிதழ், நினைவு பரிசு போன்றவைகளை எடுத்து வழங்கினர்.

இந்த “Golden Empire சாதனை பெண்கள் 2025” விருது விழாவில் கலந்து கொண்ட பிரமுகர்கள், விருதாளர்கள், அழைப்பாளர்களுக்கு ஏற்பாட்டாளர் கலைமாமணி மகேந்திரன் நடராஜா நன்றி தெரிவித்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button