Malaysia

மஇகா இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு முழு அங்கீகாரத்தை வழங்கியுள்ளது டத்தோஸ்ரீ எம்.சரவணன் பேச்சு

கோலாலம்பூர், மார்ச் 21-
மஇகா இந்திய முஸ்லிம் சமூகத்திற்கு முழு அங்கீகாரத்தை வழங்கியுள்ளதாக.
மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கூறினார்.

தான்ஸ்ரீ ச. விக்னேஸ்வரன் தலைமையிலான ம.இ.கா இந்திய முஸ்லீம் சமூகத்திற்கு முக்கியத்துவம் வழங்கி வருவதாக மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற தேசியத் தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் உடனான நோன்புத் துறப்பு விழாவில் உரையாற்றிய போது
தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் அவ்வாறு தெரிவித்தார்.

இந்த நோன்பு துறப்பு விழாவில் இந்திய முஸ்லிம் சமுகத்தினர் திரளாக கலந்து கொண்டது பெரும் மகிழ்ச்சியளிக்கிறது.
மஇகா கட்டடம் உட்பட கட்சியின் மேம்பாட்டில் இந்திய முஸ்லிம் சமுகத்தின் முக்கிய பங்களிப்பு உள்ளது.
இதன் அடிப்படையில் துன் சாமிவேலு இந்திய முஸ்லிம் சமுதாயத்திற்கு உரிய அங்கீகாரம் வழங்கியிருந்த்தாக டத்தோஸ்ரீ சரவணன் சொன்னார்.

இந்நிலையில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் இந்திய முஸ்லீம் சமுதாய மக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. இதில் தான்ஸ்ரீ ஹனிபா மேலவை உறுப்பினர் பதவி வழங்கப்பட்டதை குறிப்பிட்டு சொல்லலாம். மேலும் டத்தோ வீரா ஷாகுல் தாவூத் எச்ஆர்டி கோர்ப் தலைமை இயக்குநராக உள்ளார். இவையெல்லாம் முஸ்லீம் சமுகத்திற்கு வழங்கப்பட்ட அங்கீகாரமாகும் என்று டத்தோஸ்ரீ சரவணன் குறிப்பிட்டார்.

மேலும் டத்தோ இப்ராஹிம் ஷா டேஃப் கல்லூரியின் நிர்வாகியாக பதவி வகிக்கிறார். எம்ஐஇடி தலைமை இயக்குநராக மும்தாஜ் தொடர்ந்து பதவியில் நீடிக்கிறார்.
பீர் முஹம்மத் சபா மாநிலத் தலைவராக பதவி வகிக்கிறார்.
இவையெல்லாம் முஸ்லீம் சமூகத்திற்கு வழங்கப்பட்டுள்ள அங்கீகாரமாகும். எதிர்காலத்தில் முஸ்லீம் சமூகத்தின் ஆதரவு ம.இ.காவுக்கு இருக்கும் என்று டத்தோஸ்ரீ சரவணன் நம்பிக்கை தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button