
மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு தேவிஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் சுமூகமாக தீர்க்கப்படும் என்று நம்புகிறேன் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் நம்பிக்கை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர் மார்ச் 20-
மஸ்ஜிட் இந்தியா அருள்மிகு தேவிஶ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் சுமூகமான முறையில் தீர்க்கப்படும் என்று நம்புவதாக பத்து நாடாளுமன்ற உறுப்பினர்க பி.பிரபாகரன் கூறினார்.
இந்த ஆலயத்திற்கு வியாழக்கிழமை காலை மாநகர் மன்றம் மற்றும் கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் (DBKL) Datuk bandar ஆகியோர் சென்றுள்ளனர். அது குறித்து நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஆலயம் இடிப்படாது என்ற கூற்றைத் தொடர்ந்து. அதனை அரசு உறுதிச் செய்யும் என நான் நம்புகிறேன்.
கடந்த 8 மாதங்களாக ஆலய நிர்வாகத்தினர் இந்த விவகாரம் குறித்து அரசுடன் சிறந்த முறையில் பேச்சு வார்த்தை நடத்தி வருகின்றனர்.
இது குறித்து ஒரு தெளிவான விடைக் கிடைக்கும் என நான் பெரிதும் எதிர்ப்பார்க்கும் தருவாயில், மக்கள் பொறுமை காக்க வேண்டும் என்று பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன் பரமேஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.



