
DBKL எங்களுக்கு தெரியாமல் நிலத்தை விற்றது ஏன்? நாங்கள் இடம் மாற மாட்டோம் அருள்மிகு தேவிஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய தலைவர் பார்த்திபன் சூளுரை
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ஒளிப்பதிவாளர்
ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர் மார்ச் 20-
சுமார் 130 ஆண்டுகள் பழைமை வாய்ந்த மஸ்ஜிட் இந்தியாவில் உள்ள அருள்மிகு தேவிஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலயம் அமைந்திருக்கும் நிலத்தை DBKL ஆலய நிர்வாகத்திடம் தெரிவிக்காமல் விற்று விட்டதாக ஆலய தலைவர் பார்த்தீபன் கூறினார்.
இந்த கோவிலை அகற்றினால் 130 ஆண்டுகள் வரலாறு அழிக்கப்படும்.
ஆகையால் இந்த கோவில் இதே இடத்தில் இருக்கட்டும். நாங்கள் இடம் மாற மாட்டோம். கோவிலை வேறு இடத்திற்கு இடம் மாற்றம் செய்கிறோம் என்று நாங்கள் ஒரு போதும் கூறவில்லை என்று பார்த்திபன் திட்டவட்டமாக கூறினார்.
இந்த கோவில் நிலத்தை தனியார் நிறுவனமான ஜேக்கலிடம் விற்றதை DBKL எங்களுக்கு தெரியப்படுத்தவில்லை.கோவில் அருகில் மஸ்ஜிட் காட்டுவதாக இருந்தால் கட்டி கொள்ளட்டும். கோவில் அருகில் மஸ்ஜிட் கட்டுவதை நாங்கள் வரவேற்கிறோம் . ஆனால், கோவிலை இடம்மாற்றம் செய்ய ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்று பார்த்திபன் சூளுரைத்துள்ளார்.
கோவிலை அகற்றுவது புரானத்தை அழிப்பதற்கு சமம்.
மஸ்ஜிட் இந்தியாவில் வாழும் பக்தர்கள் இந்த கோவில் இடமாற்ற விவகாரம் தொடர்பில் பெரும் வேதனையை தெரிவித்துள்ளனர்
ஆகவே அருள்மிகு தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்தை இதே இடத்தில் நிலைத்து இருக்க அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் என்று பார்த்திபன் கூறினார்.
மஸ்ஜிட் இந்திய அருள்மிகு தேவிஸ்ரீ பத்ர காளியம்மன் ஆலய விவகாரம் தொடர்பில் தொழில் முனைவோர் மேம்பாட்டு கூட்டுறவு துறை துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் வியாழக்கிழமை பிற்பகல் ஆலயத்திற்கு வருகை மேற்கொண்டு நிலவரத்தை நேரில் கேட்டறிந்தார். அவரிடம் ஆலயம் இதே இடத்தில் இருக்க பிரதமரிடம் பேசுங்கள் என்று கேட்டிருக்கிறோம்.
இந்த கோவில் இதே இடத்தில் நிலைத்து இருக்க உதவி செய்யுங்கள் என்று டத்தோஸ்ரீ இரமணனை கோவில் தலைவர் பார்த்திபன் கேட்டுக் கொண்டுள்ளார்.



