Malaysia

கர்ப்பால் சிங்கிற்கு 11ஆவது நினைவு நாள்

 

பினாங்கு,ஏப்.17-ஜனநாயக செயல் கட்சியின் தேர்தல் வெற்றியை கெடா மாநிலத்தில் தொடக்கிவைத்த கர்ப்பால் சிங்கிற்கு ஏப்ரல் 17 வியாழக்கிழமை 11ஆவது நினைவு நாள்.

சட்ட- நீதித்துறையை அதிரவைக்கும்படி ஏராளமான வழக்குகளை நடத்திய கர்ப்பால் சிங், ஜசெக-வின் முன்னோடித் தலைவர் லிம் கிட் சியாங்கின் நெருங்கிய நண்பர்.

2005 ஆம் ஆண்டில் எதிர்கொண்ட ஒரு விபத்தினால் இடுப்பு எலும்பு கடுமையாக பாதிக்கப்பட்டு, சக்கர நாற்காலி துணை
கொண்டு தன் சட்டப் பயணத்தையும் அரசியல் நடவடிக்கையையும் தொடர்ந்து கொண்டிருந்த கர்பால் சிங், மீண்டும் 2014ஆம் ஆண்டில் கடுமையான விபத்தில் சிக்கி உயிர்துறக்க நேரிட்டது.

மலேசிய நாடாளுமன்றத்தில் பல கட்டங்களில் துன் சாமிவேலுடன் மல்லுக்குநின்ற கர்பால் சிங்கின் பெயர் மலேசிய அரசியல் வரலாற்றில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் என்பது திண்ணம்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button