
பேரா மாநில பத்திரிக்கைச் சங்கச் செயலாளர் ரவீந்திரன் காலமானார்!
ஈப்போ ஏப்.25-
சமீப காலமாக நோய்வாய்ப்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்ட பேரா மாநில பத்திரிக்கை விநியோகஸ்தர்கள் சங்கத்தின் செயலாளர் க. ரவீந்திரன்( வயது 61) வியாழக்கிழமை
காலமானார்.
கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு அனுமதிக்கப்பட்ட இவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பயனளிக்காத்தால. காலமானதாக பத்திரிக்கை விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் பி காரத்திகேசன் கூறினார்.
இவர் சங்கத்தின் நீண்டகால உறுப்பினராக இருந்து வருவதுடன் சங்கத்தின் துணைத் தலைவராகவும் துணைச் செயலாளராகவும் தற்பொழுது செயலாளராக பொறுப்பு ஏற்று வநதுள்ளார்.
இவர சங்க வளர்ச்சிக்கு நிறைய சேவைகளை ஆற்றி வந்துள்ளார். இவரின் மறைவு பேரிழப்பு என்று காரத்திகேசன் கூறியதுடன் அவரது குடும்பத்திற்கு சங்கத்தின் சார்பில் ஆழந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொண்டார். ்
ரவீந்திரனின் நல்லுடல. இன்று புந்தோங் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும் என்று அவரது மகன் டினேஷ் தெரிவித்தார்



