
India
திமுகவுக்கு இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை- தொல் திருமாவளவன்
கும்பகோணம்:
திமுக அரசியல் இயக்கமாகவும், ஆளும் கட்சியாகவும் வீரநடை போட்டு வருவதால் இன்னொரு கட்சி முட்டுக்கொடுக்க வேண்டிட அவசியமில்லை என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் கூறினார்.
திமுக பலவீனமாக இல்லை. திமுகவை வீழ்த்துவோம் என்றால், விடுதலை சிறுத்தைகள் கட்சியையும் வீழ்த்துவோம் என்று பொருள். எனவே, எங்கள் அரசியல் கோட்பாட்டை எதிர்ப்பதை வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று ஒரு சிலை திறப்பு விழாவில் தொல் திருமாவளவன் தெரிவித்தார்.
இதுபோன்ற அரசியல் நகர்வுகளுக்கு நாங்கள் இடமளித்தது கிடையாது. என்னை துருப்புச்சீட்டாக வைத்து, திமுக கூட்டணியை உடைத்துவிடலாம் என்ற அவர்களது முயற்சி தோற்றுப்போனதுஎன்று தொல் திருமாவளன் சொன்னார்.



