Malaysia

பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தால் பல தேசிய விளையாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர்.

பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தால் பல தேசிய விளையாட்டாளர்கள் உருவாகி வருகின்றனர்.

ஈப்போ, ஜுன் 2- இவ்வாண்டில் கடந்த மூன்று நாட்களாக தேசிய ரீதியில் மலேசிய இந்தியர்களுக்கு பூப்பந்து போட்டியை பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தினர் ஏற்பாடு செய்தனர்.

இம்முறை ஈப்போ பேட்மிண்டன் அரங்கம் கம்போங் சீமியில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டதாக ஏற்பாட்டுக்குழு தலைவரும், பேராக் இந்திய பூப்பந்து மன்றத்தின் தலைவருமான நா.லோகநாதன் கூறினார்.

இம்முறை 24 பிரிவுகளில் ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் 700 க்கும் மேற்பட்ட இந்திய விளையாட்டாளர்கள் பங்கு பெற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.

குறிப்பாக 35 வயதிற்குட்பட்ட மகளிர் இரட்டையர் புதிய பிரிவு அறிமுகம் செய்யபபட்டது. இப்பிரிவில் 20 குழுவினர் பங்கு பெற்றதாக அவர் சொன்னார்.

இவ்வாண்டில் ஜோகூர், சிலாங்கூர் மற்றும் பேராக் ஆகிய மாநிலத்தை சேர்ந்த விளையாட்டாளர்கள் அதிக பரிசுகளை வென்றனர். வெற்றியாளர்கள் அனைவருக்கும் தம் வாழ்த்தினை அவர் தெரிவித்துக் கொண்டார்.

இவ்வாண்டில் பொதுமக்களிடமிருந்து இப்போட்டி அமோக வரவேற்பை பெற்றது. குறிப்பாக, பேராக் மாநில பூப்பந்து விளையாட்டு ஆதரவாளர்கள் மட்டுமன்றி இதர மாநில ஆதரவாளர்களும் அரங்கில் குவிந்தனர். பொதுமக்களின் ஆதரவிற்கு அவர் நன்றியை தெரிவித்துக்கொண்டார்.

இந்நிகழ்வின் நிறைவுவிழாவில் வெற்றியாளர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கப்பட்டது. பிரமுகர்களாக டத்தோ எம்.கருத்து, ஈப்போ பாராட் எஸ். ஜெயகோபி, கிந்தா இந்தியர் சங்க தலைவர் டத்தோ ஆர்.தங்கராஜா, எஸ்.மலர்வண்ணன் மற்றும் பலர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button