Malaysia

செயற்கை நுண்ணறிவு வாழ்வாதாரத்திற்கு அவசியமாகும்

பத்துகாஜா, ஜுன் 2-

செயற்கை நுண்ணறிவு இன்றைய காலத்திற்கு மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனை வயது கட்டுப்பாடின்றி கற்று அதன் வாயிலாக அனைவரும் தங்கள் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்று இங்குள்ள இந்தியன் செட்டல்மென் @ டேசா செங்காட் மண்டபத்தில் நடைபெற்ற இயற்கை நுண்ணறிவு கருத்தரங்கை தொடக்கி வைத்தபோது பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கூறினார்.

இளைஞர்கள் இந்த செயற்கை நுண்ணறிவை ஆர்வமுடன் கற்பது அவசியமாகும். இதன் வாயிலாக அவர்கள் தங்களின் வேலை விவகாரத்தில் சிறப்பாக பணியாற்ற ஏதுவாக அமையும் என்று அவர் குறிப்பிட்டார்.

இதனை கற்று தேர்ந்தவர்களுக்கு நல்லதொரு எதிர் காலம் உண்டு. ஆகையால், தயக்கமின்றி அனைவரும் இதனை கற்பது மிகவும் அவசியமாகும்.தற்போதைய காலகட்டத்தில் உலககெங்கும் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு அதிகரித்து வருகிறது.

ஆகவே, நாமும் அதற்கேற்ப தயார்நிலையில் இருக்க வேண்டும். அதனால், இதனை கற்று தேர்வது நமது முக்கிய கடமையாக செயல்பட வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.

செயற்கை நுண்ணறிவை நாம் கற்க தவறினால் நாம் பின்னோக்கி செல்வது உறுதியாகும். எளிதில் அது நம்மை கட்டுக்கோப்பில் வைத்துவிடும். ஆகவே, செயற்கை நுண்ணறிவை கற்றுதேர்வது நமது முதன்மை பணியாகும் என்று செயற்கை நுண்ணறிவு பயிற்சியாளர் சாலினி சுப்பிரமணியம் கூறினார்.

இளைஞர்கள் மற்றும் பட்டதாரிகள் செயற்கை நுண்ணறிவு வாயிலாக தங்களின் வேலையில் பணி உயர்வு மற்றும் ஆதிக்கத்தை மேற்கொள்ள முடியும். ஆகையால், இளைய சமூகத்தினர் இத்துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்று அவர் சொன்னார்.

கடந்த 20 அல்லது 25 ஆண்டுகளுக்கு முன்னதாக இணையம் எவ்வளவு முக்கியம் என்று அறியப்பட்டது. அம்மாதிரிதான் இப்பொழுது செயற்கை நுண்ணறிவு இன்றைய வாழ்வாதாரத்திற்கு அவசியமானது என்று குறிப்பிடப்படுவதாக அவர் கூறினார்.

இங்குள்ள டேசா செங்காட் கே ஆர் தி ஏற்பாட்டில் மக்கள் நலன் அடைய வேண்டும் என்று இக்கருத்தரங்கை தலைவர் ஷா ரவின் மற்றும் செயலாளர் அ.ரகு தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 பேர் கலந்து பயனடைந்தனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button