Malaysia

புகையிலை ஒரு மெளன கொலையாளி!

பினாங்கு ஜூன் 5-

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தில் புகைப்பதை நிறுத்த வேண்டும் என்னு

பினாங்கு பயனீட்டாளர் சங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

மலேசியாவில் ஆண்டுதோறும் 27,000 புகைப்பாளர்களையும், உலக அளவில் 8 மில்லியன் அதாவது 80 லட்சம் புகைபாளர்களையும் சாகடிக்கும் சிகரெட்டுகளுக்கும் புகையிலை தொடர்பான பொருட்களுக்கும் விடை கொடுக்க வேண்டிய ஒரு தினம் தான் இந்த புகையிலை எதிப்பு தினம்.

ஒரு துண்டு சிகரெட் தாரிக்க 4,800 இரசாயனங்கள் தேவை என்றும் அதில் 69 இரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தக்கூடையது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனால் தான் உலக அளவில் புகைபிடிக்காத 1.3 மில்லியன் பேர் இரண்டாம் தர புகைப்பாளர்க இருந்து மரணமடைகின்றனர். அதாவது புகைக்கும் ஒருவரின் அருகாமையில் இருந்தாலும் விளைவு மரணம் தான் என்கிறது உலக சுகாதார அமைப்பு.

ஆண்டுதோறும் மே 31 அன்று கொண்டாடப்படும் உலக புகையிலை எதிர்ப்பு தினம் புகையிலை பயன்பாட்டின் தீங்கு விளைவிக்கும் விளைவுகள் மற்றும் சமூகத்தில் அதன் பிடியைத் தக்க வைத்துக் கொள்ள புகையிலைத் துறை பயன்படுத்தும் உத்திகள் குறித்து சிந்திக்க வைக்கின்றது என்றார் பினாங்கு பயனீட்டாளர் சங்கத்தின் தலைவர் முகைதீன் அப்துல் காதர்.

புகையிலை மற்றும் நிக்கோடின் தொழில்துறைகள், தீங்கு விளைவிக்கும் பொருட்களை, குறிப்பாக இளைஞர்களை மிகவும் கவர்ச்சிகரமானதாக மாற்ற பயன்படுத்தும் ஏமாற்று தந்திரங்களை அம்பலப்படுத்தும் கருப்பொருளில் இந்த ஆண்டு புகையிலை எதிர்ப்பு தினம் கொண்டாடப் படுவதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

பிரச்சனைக்குரிய நிக்கோடின் தயாரிப்புகளை தடை செய்ய வேண்டும் என பி.ப.சங்கம் கேட்டுக்கொள்கிறது. புகையிலை மற்றும் நிக்கோடின் தொழில் இளைஞர்களை குறிவைப்பதைத் தடுக்கும் விதிமுறைகள் பயனற்றதாக உள்ளது.

மேலும் 500,000 குழந்தைகள் இப்போது மலேசியாவில் வேப் செய்கிறார்கள். மின்-சிகரெட்டுகள் (மின்னணு நிக்கோடின் விநியோக அமைப்புகள்) மற்றும் நிக்கோடின் பைகள் (ஈறுகளுக்கு இடையில் செருகப்படுகின்றன) சிகரெட்டுகளை விட தூய்மையானவை, நவநாகரீகமானவை மற்றும் குறைவான தீங்கு விளைவிப்பவை என்று விளம்பரப்படுத்தப்படுகின்றன.

புகையிலை மற்றும் நிக்கோடின் நிறுவனங்களின் உண்மையான இலக்கு இளைஞர்களே.

இந்த தயாரிப்பு கவர்ச்சியை அதிகரிக்கவும் ஆபத்தை மறைக்கவும் பபிள் கம், செர்ரி மற்றும் தர்பூசணி போன்ற சுவைகளைப் பயன்படுத்துகின்றன.

உலக சுகாதார நிறுவத்தின் கூற்றுப்படி சந்தையில் 15,000 க்கும் மேற்பட்ட போலியான பழ சுவைகள் கொண்ட திரவங்கள் விற்கப்படுகின்றன.

இந்த தயாரிப்புகள் குழந்தைகளை கவரும் வகையில் சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளன – அவை பல வண்ணங்கள், நேர்த்தியான வடிவமைப்புகளாகவும் உள்ளன.

தேசிய விஷ மையத்தின் கூற்றுப்படி 2015 ஆண்டு வரை 111 மின்னியல் சிகரெட் மற்றும் நிக்கோடின் விஷம் சம்பவங்கள் பதிவாகியிருப்பதாக தெரிவித்துள்ளது.

பெரும்பாலான சம்பவங்கள் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளை உள்ளடக்கியுள்ளது. 2019 முதல், சுகாதார அமைச்சு மின்னியல் சிகரெட் அல்லது வேப்பிங் பயன்பாட்டுடன் தொடர்புடைய 41 நுரையீரல் நோய் (ஈவாலி) சம்பவங்களை பதிவு செய்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒவ்வொரு நோயாளிக்கும் 12 நாள் தங்குவதற்கு மவெ 150,000 வரை தேவைப்படுகின்றது.

2023 ஆம் ஆண்டில், 3 வருடம் தொடர்ந்து வேப் புகைத்ததால் 16 வயது இளம் பெண், ஈவாலி நுரையீரல் நோயால், கடுமையான இதய செயலிழப்பால் இறந்தார்.

இந்த புதிய தயாரிப்புகளை மறைப்பது மட்டும் போதாது. இந்த தயாரிப்புகள் ஆபத்தானவை என்பதைக் காட்ட அரசாங்கத்திற்கு வேறு என்ன ஆதாரம் தேவை என முகைதீன் கேள்வி எழுப்பினார்.

இந்த தயாரிப்புகளை தடை செய்ய வேண்டிய நேரம் இது. புகைபிடித்தல் தொடர்பான நோய்கள் பெரும்பாலும் வெளிப்பட பல தசாப்தங்கள் ஆகும்.

இது நீண்டகால தீங்கு பற்றிய பொதுமக்களின் புரிதலை சிக்கலாக்குகிறது.சட்டவிரோத போதை விநியோகத்திற்கு வேப் பொருட்கள் பயன்படுத்தப்படுவதால், பிரச்சனை இப்போது தீவிரமடைந்துள்ளது.

ஃபென்டானைல், மெத்தம்பேட்டமைன் மற்றும் செயற்கை ஹாலுசினோஜென்கள் உள்ளிட்ட பொருட்கள் வேப் திரவங்களில் சேர்க்கப்படுகிறது.

கஞ்சா கலந்த வேப் பொருட்கள் 2015 முதல் விற்கப்படுகின்றன. மேலும் 2023 ஆம் ஆண்டில், “மேஜிக் காளான்” வேப்களில் செயற்கை போதை பொருள் இருப்பது கண்டறியப்பட்டது.

அனைத்து புகைபிடித்தல் மற்றும் வேப்பிங் பொருட்களுக்கும் விரிவான தடையை அமல்படுத்த மலேசிய அரசாங்கத்தை பினாங்கு பயனீட்டாளர் சங்கம் கேட்டுக்கொள்கிறது என்றார் முகைதீன் அப்துல் காதர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button