
மஸ்ஜித் இந்தியாவில் மீண்டும் நில அமிழ்வு
கோலாலம்பூர்: ஆக. 28-
மஸ்ஜித் இந்தியாவின் மீண்டும் ஒரு நில அமிழ்வு சம்பவம் நிகழ்ந்துள்ளதால் அப்பகுதி பாதுகாப்பானதா எனும் கேள்வி அங்குள்ள குடியிருப்பாளர்கள் மத்தியில் எழுந்துள்ளது. விஜயலட்சுமி புதையுண்ட இடத்திற்கு அருகில் 50 மீட்டர் தூரத்தில் இந்த நில அமிழ்வு சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்த நில அமிழ்வு நேற்று இரவு ஏற்பட்டுள்ளது. கடந்த வாரம் நடைப்பதை உள்வாங்கி சரிந்து விழுந்ததில் இந்திய பிரஜை விஜயலெட்சுமி புதையுண்ட சம்பவம் நாட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. விஜயலட்சுமியை தேடும் பணி தொடர்ந்து ஆறு நாட்களாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் அடுத்தடுத்து நில அமிழ்வுகள் நிகழ்ந்து வருவதால் அப்பகுதி வணிகர்களும் மக்களும் அச்சமடைந்துள்ளனர். ஜாலான் மஸ்ஜித் இந்தியா வணிகப் பகுதியில் பெரும் அதிர்ச்சி அலையை இது ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



