Malaysia

ஆறு வயது சிறுவன் இறுதிச் சடங்கு கண்ணீ்ரில் நடைபெற்றது  உடல் தகனம் செய்யப்பட்டது

 

ஜொகூர்பாரு:ஜூலை 30-

சிறுவன் இறுதிச் சடங்கு கலந்து கொண்டவரகளின் கண்களை குளமாக்கி மிகவும் சோகத்துடன் நடைபெற்றது.

 

ஜொகூர் பாருவில் காணாமல் போன திஷாந்த் உடல் சில நாட்களுக்கு முன்பு ஜெம்பூல் ரொம்பினில் புதைக்கப்பட்டுள்ளது. அந்த சிறுவன் கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கலாம் எனும் சூழலில் அவனது தந்தைதான் இதனை செய்திருக்கிறார் என்பது ஆரம்ப கட்ட விசாலணையில் தெரியவந்தது.

 

திஷாந்தின் இறுதிச்சடங்கு அவரது பாட்டியின் வீட்டில் நடைபெற்றது. அச்சிறுவன் இறுதி சடங்கு மிகவும் சோகமே உருவான சூழ்நிலையில் கண்ணீரூடன் நடந்தது. உறவு என்பதை தாண்டி மனிதநேயம் கண்களை குளமாக்கியது. அங்கிருந்தவர்கள் அச்சிறுவன் உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

 

இந்த இறுமிச்சடங்கு காலை 8 மணிக்கு தொடங்கியது. சிறுவன் பிரேதம் ஜாலான் கெபுன் தேவில் உள்ள இந்து தகனக் கொட்டகையில் தகனம் செய்யப்பட்டது. இதில் குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய நண்பர்கள் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button