
Malaysia
திஷாந்த் தாயார் விரக்தியில் தற்கொலை முயற்சி
ஜொகூர்பாரு:ஜூலை 30-
தனது மகன் திஷாந்த் படுகொலை செய்யப்பட்டது அறிந்து மனமுடைந்து போன அவரது தாயார் விரக்தியில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தன் குழந்தைக்கு ஏற்பட்ட நிலையை கண்டு மனமுடைந்து போன அவர் அதிர்ச்சியில் இருந்து மீள முடியாத சூழலில் தற்கொலைக்கு முயன்றதாக ஜொகூர் மாநில பெண்கள், குடும்பம் சமூக மேம்பாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் கைரின் நிசா இஸ்மாயில் தெரிவித்தார்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து அவரது குடும்பத்திற்கு உளவியல் உதவி வழங்க சமூக நலத் துறையின் பிரதிநிதி ஒருவர் அனுப்பப்பட்ட நிலையில் அவர்கள் அதனை ஏற்க மறுத்து விட்டனர்.
திஷாந்த் தாயார் தாயார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



