
Malaysia
பினாங்கு மாநில ஆளுநரிடமிருந்து அர்விந் பூபாலன் பி.கே.டி. பட்டம் பெற்றார்
பினாங்கு, ஜூலை 30-
பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஶ்ரீ உத்தாமா ரம்லி ஙா தாலிப் அவர்களின் 84ஆம் ஆண்டு பிறந்தநாளை முன்னிட்டு பினாங்கு இந்தியர் நல்வாழ்வு இயக்கம் தலைவரும் பத்து உபான் ஜயப்பன் சேவை சங்கத்தின் தலைவருமான அர்விந் பூபாலனுக்கு பி.கே.டி. எனப்படும் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.
தற்பொழுது பினாங்கு போக்குவரத்து துறையின் (ஜே.பி.ஜே) நிர்வாக சேவை பிரிவின் தலைவராக பொறுப்பேற்றிருக்கும் அர்விந் பினாங்கு மாநிலத்தில் பல்வேறு நிகழ்வுகள் குறிப்பாக சமுதாயத்திற்காக சேவை புரிந்துள்ளார்.
அவருடையை சேவைக்கு கிடைக்கும் அங்கீகாரமாக இந்த விருது அங்கீகாரம் அமைந்துள்ளது.
இந்த விருது தமக்கு வழங்கியதற்கு பினாங்கு மாநில அரசாங்கத்திற்குஅர்விந் நன்றி தெரிவித்து கொண்டதோடு தன்னுடைய சமூகப் பணி தொடரும் என்று குறிப்பிட்டுள்ளார்.



