
நான்கு மாத குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுசை சிகிச்சை ! பிரதமர் பாராட்டு
கோலாலம்பூர்,ஜன.6- நான்கு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை படைத்த மருத்துவக் குழுவின் வரலாற்றுச் சாதனையைப் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் பாராட்டினார். இதற்கு முன்பு, நான்கு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாகச் செய்யப்பட்டது. நாட்டின் தலைவராகப் பணிப்பளுமிக்க கால அட்டவணையைக் கொண்டிருந்த போதிலும், ஒரு தந்தை மற்றும் தாத்தா என்ற உணர்வுடன், அந்தச் சிறு குழந்தையைக் காப்பாற்றிய மருத்துவக் குழுவின் வெற்றியைக் கண்டு பிரதமர் நெகிழ்ந்துள்ளார். சமூக ஊடகப் பதிவு ஒன்றின் வாயிலாக, இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியானது நாட்டின் சுகாதாரத் துறையினரின் நிபுணத்துவம், தொழில்முறை மற்றும் உயரிய அர்ப்பணிப்பைத் தெளிவாகப் பிரதிபலிக்கிறது என பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம், இந்த வரலாற்றுச் சாதனையை நாட்டின் சுகாதாரப் பணியாளர்களின் நிபுணத்துவம் மற்றும் அர்ப்பணிப்பின் வெளிப்பாடு என்று வர்ணித்துள்ளார்.
இந்த மிகவும் சிக்கலான மற்றும் அதிக ஆபத்து நிறைந்த இத்தகைய மருத்துவ முறையை வெற்றிகரமாகச் செயல்படுத்தியதன் மூலம், நாட்டின் சுகாதாரப் பணியாளர்களின் நிபுணத்துவம் தெளிவாக நிரூபிக்கப்பட்டுள்ளது என்று அவர் கூறினார். இது குறித்து பிரதமர் கூறுகையில்: “6.2 கிலோ எடை கொண்ட நான்கு மாதக் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையை வெற்றிகரமாகச் செய்து வரலாற்றுச் சாதனை படைத்த மலாயா பல்கலைக்கழக மருத்துவ மைய (PPUM) மருத்துவக் குழுவிற்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். இது நாட்டின் சுகாதாரப் பணியாளர்களின் நிபுணத்துவம், தொழில்முறை மற்றும் உயரிய அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கிறது. குறிப்பாக, மிகவும் சிக்கலான மற்றும் அதிக ஆபத்துள்ள மருத்துவ முறைகளைக் கையாள்வதில் அவர்களின் திறமையை இது காட்டுகிறது,” என்று பி்தமர் தெரிவித்தார்.



