Malaysia

மக்கள் ம.இ.காவை திரும்பிப் பார்க்கச் செய்தவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் கட்டுக்கோப்புடன் நடைபெற்ற ம.இ.கா தேர்தல் டத்தோ தமிழ்ச்செல்லன் பாராட்டு

கோலாலம்பூர்,ஜூலை 9-
ம.இ.கா என்றால் இப்போது பிடித்தவர்கள் தற்போது அதிகம் உருவாகி விட்டதற்கு தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் முக்கிய காரணம் என்று ரவூப் ம.இ.கா தொகுதி தலைவர் டத்தோ க.தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.

மக்கள் ம.இ.காவை திரும்பிப் பார்க்க வகை செய்தவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன். உதவி என்று ம.இ.கா தலைமையகத்தை நாடி வரும் மக்கள் இருக்கவே செய்கிறார்கள். யார் உதவி வழங்கவில்லை என்றாலும் ம.இ.கா உதவும், தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் உதவி வழங்குவார் என்ற நம்பிக்கை மக்களுக்கு உண்டு என்று பகாங் மாநில ம.இ.கா உச்சமன்ற உறுப்பினருமான டத்தோ தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

நாடு தழுவிய நிலையில் அண்மையில் நடைபெற்ற ம.இ.கா தேர்தல் ஒரு சான்று. ம.இ.காவின் உதவி தலைவர், மத்திய செயலவை மற்றும் மாநில பொறுப்பாளர்கள் தேர்தல் கட்டுக்கோப்புடன் ஜனநாயக முறைப்படி நடந்துள்ளதாக ரவூப் ம.இ.கா தொகுதி தலைவர் டத்தோ தமிழ்ச்செல்வன் பாராட்டியுள்ளார்.

ம.இ.கா வரலாற்றில் அதன் தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் தலைமைத்துவத்தில் ம.இ.கா சரியான தடத்தில் பயணித்முக் கொண்டிருக்கும் நிலையில் மக்கள் திரும்பி பார்க்கும் ஒரு தேர்தலாக ம.இ.கா தேர்தல் அமைந்திருந்ததாக டத்தோ தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

ம.இ.கா உதவித் தலைவர், ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினர் மற்றும் மாநில பொறுப்பாளர்கள் தேர்தல் மிகவும் கட்டுக்கோப்புடன் நடைபெற்றது. நாடு தழுவிய நிலையில் கிளைத்தலைவர்கள் தங்கள் வாக்குகளை மிகவும் நேர்த்தியாக செலுத்தியுள்ளனர்.

நாடு தழுவிய நிலையில் தேர்தல் குழுவினர் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுள்ளனர். நான் பல தேர்தல்களுக்கு தேர்தல் அதிகாரியாக சென்றிருக்கிறேன். ஆனால், கடந்த சனிக்கிழமை நடைபெற்ற ம.இ.கா தேர்தல் மிகவும் நேர்த்தியான முறையில் மிகவும் கட்டுக்கோப்புடன் ஜனநாயக முறைப்படி நடைபெற்றதாக டத்தோ தமிழ்ச்செல்வன் சொன்னார்.

ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தலைமையில் கட்சி தலைமைத்துவம் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கட்சியின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் கட்சி உறுப்பினர்கள் நலம் சார்ந்து இருப்பதை காண முடிகிறது. இதில் குறிப்பாக ம.இ.காவின் மூன்று தொகுதிகளை கொண்ட கட்டடங்கள் அமைக்கும் திட்டம் இந்திய சமுதாயத்தை தலைநிமிரச் செய்யும் என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button