Malaysia

டத்தோஸ்ரீ எம்.சரவணன் லண்டன் நாட்டுக்கு இலக்கிய பயணம்… கம்பன் விழாவில் பங்கேற்று பேருரை ஆற்றுகிறார்

கோலாலம்பூர்,ஜூலை 9-
பன்னிரண்டாம் நூற்றாண்டில் கவிச்சக்கரவர்த்தி கம்பனால் உருவான கம்பராமாயணம் இன்றும் உலகெங்கும் முழங்கிக் கொண்டிருக்கிறது.
பல்வேறு நாடுகளில் கம்பன் கழகங்களை நிறுவி கம்பன் விழாவை ஆண்டுதோறும் நடத்தி வருகிறார்கள்.

ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணன்
அண்மையில் இலங்கையில் நடைபெற்ற கம்பன் விழாவில் சிறப்புப் பிரமுகராகச் சென்று பேருரை ஆற்றியிருந்தார்.

இந்நிலையில் லண்டனில் நடக்கவிருக்கும் கம்பன் விழாவிற்கும் சிறப்புப் பிரமுகராக பேருரையாற்ற டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் லண்டன் செல்கிறார்.
அரசியலும் இலக்கியமும் ஆன்மீகமும் ஒரு சேர வாழ்ந்து வருபவர் டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் என்றால் அது மிகையில்லை.

உலகத் தமிழர்கள் மத்தியில் பிரசித்தி பெற்ற ஓர் அரசியல்வாதியாகவும், இலக்கியவாதியாகவும் வலம் வரும் டத்தோஸ்ரீ சரவணன் ஜுலை 13, 14ஆம் தேதிகளில்
லண்டன் அறிவு அறக்கட்டளையின் ஏற்பாட்டில் நடைபெறும் கம்பன் விழாவில் கலந்து கொள்ள லண்டன் செல்லவிருக்கிறார்.

டத்தோஸ்ரீ சரவணன் செல்லும் இடங்களில் எல்லாம் மலேசிய மண்ணின் மனமும் வீசுகிறது என்பது நிதர்சனம். அந்த வகையில் மலேசியர்களாகிய நமக்கும் பெருமை சேர்க்கும் வகையில் டத்தோஸ்ரீ லண்டன் பயணமாகவுள்ளார். உங்கள் பயணம் சிறப்பாக அமைய தேசம் ஊடகத்தின் மனம் நிறைந்த வாழ்த்துகள்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button