
இலங்கை ஆளுநர் செந்தில் தொண்டமான்-தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் சந்திப்பு
கோலாலம்பூர், ஜூலை.9-
இலங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் மரியாதை நிமர்த்தமாக ம.இ.கா தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் அவர்களை சந்தித்தார்.

செந்தில் தொண்டமான் ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணனை சந்திக்க மலேசிய வருகை புரிந்தார். இந்நிலையில் ம.இ.காவின் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ விக்னேஸ்வரனை மரியாதை நிமித்தம் சந்தித்தார்.
இந்த சந்திப்பில் இந்திய சமுதாயம் குறிப்பாக தமிழ் சமுதாயத்தின் நல திட்டம் மற்றும் அவர்களின் வாழ்வாரதார திட்டம் தொடர்பாக இரு நாடுகளின் பங்களிப்பு குறித்து பேசப்பட்டது.
இதில் ம.இ.கா தேசியத் தலைவர் இலங்கை வாழ் தமிழர்கள் தொடர்பான விவகாரத்தில் ம.இ.கா என்றும் துணை நிற்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.
ம.இ.காவின் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் இலங்கை தமிழர் வாழ்வாதாரத்திற்கு எப்போதும் ம.இ.கா சார்பாக குறல் கொடுப்பேன் என தெரிவித்தார்.
செந்தில் தொண்டமான் நேற்று செவ்வாய்க்கிழமை காலை மலேசிய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அவர்களை மரியாதை நிமர்த்தமாக சந்தித்தார்.
என்பது குறிப்பிடத்தக்கது.



