SportsMalaysia

9 வருடங்கள் கழித்து மலேசியாவில் மீண்டும் Formula 1 உலக மோட்டார் கார் பந்தயம்

தி. கிரிஷன்

User Rating: Be the first one !

உலகின் மிக உயரிய ஒற்றை இருக்கை (Single-Seater) மோட்டார் கார் பந்தயத் தொடரான Formula One – F1 போட்டி, பல ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் மலேசியாவில் நடைபெறவுள்ளது. அக்டோபர் 2 முதல் 4 ஆம் தேதி வரை, செப்பாங் சர்வதேச பந்தயப் பாதையில் (Sepang International Circuit – SIC) Gulf Air Bahrain Grand Prix தலைமையில் நடத்தப்படுவதாக ஃபார்முலா ஒன் நிர்வாகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், மலேசியா மீண்டும் உலகத் தரத்திலான இந்த மோட்டார் கார் பந்தயத்தை நடத்துவது நாட்டிற்குப் பெருமை  என்றும், அதற்கு அரசாங்கம் முழு ஒத்துழைப்பையும் வழங்கும் என்றும் தெரிவித்தார். Formula 1-இன்  தலைவரும்  தலைமை நிர்வாக அதிகாரியுமான  Stefano Domenicali, Sepang பந்தயப் பாதை Formula 1 வரலாற்றில் முக்கியமான இடத்தைப் பெற்றுள்ளது என்றும், மலேசியாவில் இப்போட்டி மீண்டும் நடைபெறுவது உலகம் முழுவதும் உள்ள இரசிகர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி என்றும் கூறினார். இதனிடையே, FIA தலைவர் Mohammed Ben Sulayem, Formula 1 மீண்டும் Sepang-இல் நடைபெறுவது மலேசியாவிற்கும் சர்வதேச மோட்டார் விளையாட்டு அமைப்புகளுக்கும் இடையிலான வலுவான ஒத்துழைப்பை வெளிப்படுத்துவதாகக் குறிப்பிட்டார். மேலும், பஹ்ரைன் பட்டத்து இளவரசரும் பிரதமருமான Prince Salman bin Hamad Al Khalifa, Bahrain Grand Prix-யை மலேசியாவில் நடத்துவது இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேலும் வலுப்படுத்தும் என்றும், உலகம் முழுவதும் உள்ள Formula 1 இரசிகர்களுக்கு மறக்கமுடியாத அனுபவத்தை வழங்கும் என்றும் தெரிவித்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button