Malaysia

கிராப் ஓட்டுநர்களுக்கு மேலும் சோதனை!

கோலாலம்பூர்: கிராப் ஓட்டுநர்களுக்கான ஊதியம் அல்லது கட்டணத்தை குறைக்கும் புதிய விதிமுறைகளை வெளியிடும் கிராப் மலேசியாவின் நடவடிக்கை, பொருளாதார நெருக்கடியை அதிகப்படுத்தும் வகையில் உள்ளது.

இதனிடையே பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்ளும் மக்களுக்கு உதவும் அரசாங்கத்தின் முயற்சிகளுக்கு இந்த நடவடிக்கை தடையாக உள்ளது என ஹுலு லங்காட்டின் நாடாளுமன்ற உறுப்பினர் முகமட் சானி ஹம்சான் கூறினார்.

கோவிட்-19 தொற்றுநோய்க்குப் பிறகு, பலர் தங்கள் குடும்பத்தை ஆதரிப்பதற்காக கிராப் டிரைவர்களாக பணி புரிந்து வருவது குறிப்பிடத்தக்கது. இவ்வேளையில் இது கிராப் வெளியிடும் இந்த புதிய விதிமுறை அவர்களும் மேலும் சிக்கலான சூழ்நிலையை ஏற்ப்படுத்தும்.

ஒரு கிலோமீட்டருக்கு 70 சென்னிலிருந்து 25 சென்னாகக் குறைப்பது கிராப் டிரைவர்களின் வருமானத்தைப் பாதிக்கும் என்று அவர் கூறினார்.

ஏனெனில் அவர்களில் பெரும்பாலோர் டாக்சி டிரைவர்கள் போன்ற நெரிசலான பகுதிகளில் இருக்காமல் தூரத்தின் அடிப்படையில் பயணிகளை வழங்குகிறார்கள். எனவே, இந்தப் பிரச்னையில் போக்குவரத்துத் துறை அமைச்சர் அந்தோணி லோக் தலையிட வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button