
ஃபிரன்சாய்ஸ் தொழில் துறையில் ஆர்வம் உள்ள இந்தியர்கள் பெர்னாஸ் வழங்கும் வர்த்தக வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் வலியுறுத்து
கோலாலம்பூர்,பிப்.21-
ஃபிரன்சாய்ஸ் தொழில் துறையில் ஆர்வம் உள்ள இந்தியர்கள் பெர்னாஸ் எனப்படும் பெர்பாடானான் நேஷ்னல் பெர்ஹாட் வழங்கும் வர்த்தக வாய்ப்புகளை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தொழில் முனைவோர் மேம்பாடு கூட்டுறவுத் துறை துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் வலியுறுத்தியுள்ளார்.
ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் ஈடுபட நினைப்பவர்களுக்கு பெர்னாஸ் தொடர்ந்து வழிகாட்டி வருகிறது.
இந்த வாய்ப்புகளை இந்திய சமுதாய மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று டத்தோ ரமணன் கேட்டுக் கொண்டுள்ளார்.
கடந்த 2000ஆம் ஆண்டு முதல் ஃபிரன்சாய்ஸ் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களுக்கு பெர்னாஸ் உரிய வழிகாட்டல்களை வழங்கி வருகிறது.
இதில் பயிற்சிகள், நிதியுதவுகள் உட்பட அனைத்து உதவிகளையும் பெர்னாஸ் வழங்கி வருவதாக பெர்னாஸ் அலுவலகத்திற்கு வருகை மேற்கொண்ட போது செய்தியாளர்களிடம் டத்தோ ரமணன் அவ்வாறு கூறினார்.
பெர்னாஸ் இதுவரை 5,590 தொழில் முனைவர்களை உருவாக்கியுள்ளது. இதில் 35ஆயிரம் வேலை வாய்ப்புகளையும் பெர்னாஸ் உருவாக்கி உள்ளது. பெர்னாஸ் எனப்படும் பெர்பாடானான் நேஷ்னல் பெர்ஹாட் கடந்த 1969ஆம் ஆண்டு தொடங்கப்பட்டதாக டத்தோ ரமணன் தெரிவித்தார்.
நாட்டில் முன்னணி ஃபிரன்சாய்ஸ் நிறுவனங்கள் பெர்னாஸுடன் இணைந்து செயல்படுகின்றன.
அந்த வகையில் இவ்வாண்டு மேலும் 5 ஆயிரம் ஃபிரன்சாய்ஸ் தொழில் முனைவர்களை உருவாக்க பெர்னாஸ் திட்டமிட்டுள்ளதாக டத்தோ ரமணன் குறிப்பிட்டுள்ளார்.
ஃபிரன்சாய்ஸ் தொழில் துறையில் ஆர்வம் உள்ள எந்த சமூகமாக இருந்தாலும் அவர்களுக்கு வழிகாட்ட பெர்னாஸ் தயாராக இருப்பதாகவும்
இதில் எந்த பாகுபாடும் பார்க்கப்படாது என்றும் பெர்னாஸ் தலைவர் டத்தோ அஸிமா கூறினார்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



