
ஏழைப் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் கணினி வகுப்பை தடை செய்வதா? சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் என்னதான் நடக்கிறது? ரத்னவள்ளி அம்மையார் கேள்வி
தேசம் செய்திகள் குணாளன் மணியம், ஒளிப்பதிவாளர் ரேவதி குணாளன்
பெட்டாலிங்ஜெயா, பிப்.28-
தனிப்பட்ட இருவரின் சுயநலத்திற்காக ஏழைப் பிள்ளைகளுக்காக நடத்தப்படும் கணினி வகுப்பை தடை செய்வது எந்த வகையில் நியாயம் என்று சமூக சேவையாளர் ரத்னவள்ளி அம்மையார் கேள்வி எழுப்பியுள்ளார்.

இந்த விவகாரம் எனக்கு பெரும் வேதனையை தருகிறது. ஒரு சிலரின் நடவடிக்கையால் வசதி குறைந்த மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சிலாங்கூர் தமிழ்ச் சங்கம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் ரத்னவள்ளி அம்மையார் அவ்வாறு கூறினார்.
தமிழர்களே கணினி வகுப்புக்கு தடை செய்யலாமா? அதுவும் சம்பந்தப்பட்ட பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் இதனை செய்திருப்பது வேதனையளிக்கிறது.மாணவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு இப்பிரச்சினைக்கு கல்வியமைச்சும் கல்வி இலாகாவும் உரிய தீர்வு காண வேண்டும் என்று ரத்னவள்ளி அம்மையார் கேட்டுக் கொண்டார்.
இப்பிரச்சினைக்கு தீர்வு இல்லையென்றால் நாங்கள் போராட்டத்தில் குதிக்க வேண்டிய நிலை ஏற்படலாம்.
கிள்ளான் சிம்பாங் லீமா தமிழ்ப்பள்ளியில் கணினி வகுப்பை தடை செய்வதற்கான
நோக்கம் என்ன?.
இதனால் நமது மாணவர்களின் எதிர்காலம் தான் பாதிக்கப்படுகிறது என்று ரத்னவள்ளி அம்மையார் சொன்னார்.
சிலாங்கூர் தமிழ் சங்கத்தின் தலைவர் எல்.சேகர், பள்ளியின் பெற்றோர் நாகராஜா சின்னையா ஆகியோரின் அழைப்பின் பேரில் நான் இங்கு வந்தேன். இதில் குறிப்பாக தமிழ்ப்பள்ளி பிரச்சினை என்பதால் வந்ததாக ரத்னவள்ளி அம்மையார் குறிப்பிட்டார்.



