Malaysia

ஒரு தட்டு ஹோக்கியான் மீயின் விலை 18 வெள்ளியா? அமலாக்க அதிகாரிகள் என்ன செய்கின்றனர்?

தேசம் அதிரடி அலசல் குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 4-

நாட்டில் அரிசி, சமையல் எண்ணெய், மீன், காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி ஏறி வி்ட்ட எரிச்சலில் இருக்கும் நிலையில் ஒரு தட்டு ஹோக்கியான் மீயின் விலை 18 வெள்ளி என்றால் எப்படி இருக்கும்?

 

ஒரு தட்டு ஹோக்கியான் மீ வழக்கமாக 10 வெள்ளி முதல் 12 வெள்ளி வரையில்தான் இருக்கும். ஆனால், தலைநகரின் மையப்பகுதியில் ஜாலான் மஹாராஜா லேலாவில் அமைந்துள்ள ஒரு சாதாரண உணவகத்தில் ஒரு தட்டு ஹோக்கியான் மீயின் விலை 18 விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு இந்திய குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட கடையை பயணத்தின் போது திடிரென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த கடைக்கு வெளியில் ஐந்தடியில் போடப்பட்டிருந்த மேஜையில் அந்த கடும்பத்தினர் அமர்ந்தனர். அப்போது ஒரு இந்தியப் பெண் ஆர்டர் எடுத்தார். அது ஒரு சீன உணவகம். அந்த பெண் ஆர்டர் எடுத்து விட்டு சென்றார். உணவு விலை குறித்து எதுவும் சொல்லவில்லை.

ஹோக்கியான் மீ, ஹோக்கியான் மீகூன், ஹோக்கியான் கொய்தியாவ் என்று மூன்று தட்டு உணவு பற்றும் பானங்கள் ஆர்டர் செய்து விட்டு பில் கேட்ட போது அந்த இந்தியப் பெண் 74 வெள்ளி 50 காசு என்றார். அந்த இந்திய குடும்பத்தின் பையன் ஒருவன் தவறாக கணக்கு பண்ணி விட்டீர்கள் என்று கூறிய போது பில்லை பிரிண்ட் போட்டு கொடுத்தார். அதில் ஒரு தட்டு ஹோக்கியான் மீயின் விலை 18 வெள்ளி என்று பிரிண்ட் செய்யப்பட்டிருந்தது.

ஒரு தட்டு ஹோக்கியான் மீயின் விலை 18 வெள்ளியா? கொஞ்சம்கூட மனசாட்சி இல்லையா? இப்படி ஏன் கொள்ளை லாபம் சம்பாதிக்கிறீர்கள்? இதை தட்டிக் கேட்க யாரும் இல்லையா? அமலாக்க அதிகாரிகள் யாரும் இல்லையா? நீங்கள் என்னதான் செய்கிறீர்கள்? எல்லா விலைகளும் இப்படி உயர்ந்து கொண்டே போனால் பொதுமக்கள் என்ன செய்வார்கள்?

உயர்தர உணவகங்கள், ஸ்டார் தங்கும் விடுதிகளில் விற்பனை செய்யப்படும் உணவு வகைகளுக்கு இணையாக இந்த சாதாரண உணவுக்கடையில் விலை உள்ளது. அந்த ஹோக்கியான் மீயில் அப்படி எதுவும் ஸ்பெஷல் இல்லை என்று சம்பந்தப்பட்ட இந்திய குடும்பத்தினர் சமூகவலைத்தளத்தில் பதிவிட்டுள்ளனர்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button