
ஈப்போ ஓம் தேவா ஸ்ரீ மதுரைவீரன் ஆலயத்தின் 35ஆம் ஆண்டு திருவிழா மார்ச் 9ஆம் தேதி நடைபெறுகிறது தீபன் சக்கரவர்த்தி அழைக்கிறார்
ஈப்போ, மார்ச் 4-
ஜெலாப்பாங், தம்பாஹான் பாருவில் அமைந்திருக்கும் ஓம் தேவா ஸ்ரீ மதுரைவீரன் ஆலயத்தின் திருவிழா வரும் மார்ச் 9ஆம் தேதி நடைபெறுவதாக ஆலயத் தலைவர், தீபன் சக்கரவர்த்தி தெரிவித்தார்.

சனிக்கிழமைநடைபெறவிருக்கும் இந்த ஆலயத்தின் திருவிழாவை முன்னிட்டு மார்ச் 8 ஆம தேதியன்று காலையில் அனைத்து சுவாமிகளுக்கும் விஷேச மஹா யாகம் நடைபெறவுள்ளது .
இதில் பக்தர்கள் கலந்து கொள்ளலாம். திருவிழா அன்று பக்தர்கள் காலை 6.00 மணி தொடங்கி காலை 8.30 வரை பால் குடம் நேர்த்திக் கடன் செலுத்தலாம்.
பின்னர் விஷேச பூஜை நடைபெற்று, மஹேஸ்வர பூஜை நடைபெறும். அடுத்து அன்னதானம் பக்தர்களுக்கு பரிமாறப்படும் என்றார்.
இந்த திருவிழாவில் ஜெலாப்பாங் சட்டமன்ற உறுப்பினர், சியா பாவ் ஹியான் சிறப்பு வருகை புரிவார்.
இந்த ஆலயம் புதிதாக கட்டப்படும் பொருட்டு நிலம் வாங்கப்படும் முயற்சியில் நிதி திரட்டப்படுகிறது. அதற்கு ஆதரவு வழங்க விரும்புவர்கள் Public bank 3231094624 Persatuan Penganut Dewa Sri Mathurai VeeranTambahan Baru Jelapang வங்கியில் பணம் செலுத்தலாம்.
இது தொடர்பாக தீபன் சக்கரவரத்தி 016-5954705/ 016-5462326 என்ற எண்களுக்கு அழைக்கலாம். “

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்




