Malaysia

மைபிபிபி கட்சி 5 லட்சம் உறுப்பினர்கள் இலக்கை கொண்டு துடிப்புடன் செயல்படும் கட்சி சட்டதிட்டங்கள், கட்சி சின்னம், ஆண்டு கூட்ட நடைமுறை மாற்றியமைக்கப்படும் இடைக்கால தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் தகவல்

தேசம் செய்திகள் குணாளன் மணியம் படங்கள் : ரேவதி குணாளன்

கோலாலம்பூர்,பிப்.3-

மைபிபிபி கட்சி 5 லட்சம் உறுப்பினர்களுடன் இலக்கை நோக்கி பயணிக்க சில மாற்றங்களை முன்னேடுக்கவுள்ளதாக மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் சூளுரைத்துள்ளார்.

மைபிபிபி கட்சிக்குள் அதிகமான இளைஞர்களை கவர கட்சி சட்டதிட்டங்கள், கட்சி சின்னம், கட்சியின் ஆண்டு கூட்டம் போன்றவைகள் மாற்றியமைக்கப்படும் என்று மைபிபிபி கட்சியின் உச்சமன்ற கூட்டத்திற்கு தலைமையேற்ற பிறகு செய்தியாளர்களிடம் டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் அவ்வாறு கூறினார்.

மைபிபிபி கட்சியில் மொத்தம் 3 லட்சத்து 24 ஆயிரம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள். கட்சி பல சிக்கல்களை சந்தித்து தற்போது நல்ல நிலைக்கு வந்துள்ளது. கட்சியை சீரமைப்பதுதான் எங்களின் முதல் வேலை. இதற்காக உச்சமன்ற கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாக டத்தோ லோக பாலா தெரிவித்தார்.

இதில் மிக முக்கியமாக மைபிபிபி கட்சியின் சட்டதிட்டங்களை மாற்ற நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளோம். அதன் பிறகு கட்சியின் சின்னத்தை மாற்ற முடிவெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆண்டு கூட்டத்தை 12 பாதங்களில் இருந்து 18 மாதங்களில் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் டத்தோ லோக பாலா மோகன் சொன்னார்.

மைபிபிபி கட்சி தற்போதைய ஒற்றுமை அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கும். இதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வாருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம். மேலும் சம்பந்தப்பட்ட அமைச்சுகளுக்கும் கடிதம் எழுதியிருக்கிறோம். மைபிபிபி கட்சியில் பழைய உறுப்பினர்கள் எங்களுடன் இணைந்து விட்டனர். கட்சியை மேலும் வலுப்படுத்துவதுதான் தங்கள் நோக்கம் என்று டத்தோ லோக பாலா குறிப்பிட்டார்.

கட்சியில் அதிகமான இளைஞர்களை கவர கட்சியின் சின்னத்தை மாற்ற முடிவு செய்தோம். 18 வயது வாக்காளர்களை கவர வேண்டும். மைபிபிபி கட்சியின் 98 தொகுதிகள், 2,800 கிளைகள் தங்கள் ஆண்டு கூட்டத்தை நடத்தி முடித்து விட்டனர். மாநில அளவில் மாநாடுகள் தொடங்கி விட்டன. மைபிபிபி கட்சயின் ஆண்டு கூட்டம் ஜூன் மாதம் நடைபெறும் என்று டத்தோ லோக பாலா மோகன் கூறினார்.

கட்சியின் ஆண்டு கூட்டத்தில் உச்சமன்றத்தின் அனைத்து முடிவுகளும் பேராளர்களிடம் முன்வைக்கப்படும். மேலும் 3 ஆயிரம் கிளைகளை அமைத்து 5 லட்சம் உறுப்பினர்களை உருவாக்க வேண்டும் என்பதே தங்கள் இலக்காகும் என்று டத்தோ லோக பாலா மோகன் சொன்னார்.

கட்சியில் ஏற்பட்ட பிரச்சினைகளால் பிரிந்து சென்றவர்கள் மீண்டும் கட்சிக்கு தாராளமாக வரலாம். எங்களோடு இணைந்து மக்களுக்கு சேவையாற்றும் போராட்டத்தில் மைபிபிபி உறுப்பினர்கள் இறங்க வேண்டும்.

கட்சியின் முன்னாள் தலைவராக இருந்த மறைந்த டத்தோ மெக்லின் டிக்ருஸ் கட்சிக்காக பாடுபட்டிருக்கிறார். அவரின் போராட்டத்தை முன்னிறுத்தி கட்சியின் மேம்பாட்டிற்காக பாடுவோம் என்று டத்தோ டாக்டர் லோக பாலா மோகன் கேட்டுக் கொண்டுள்ளார்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button