InternationalMalaysia

புகழை தேடாத மாமனிதர் புரட்சியை ஏற்படுத்திய உன்னத தலைவன் துன் சாமிவேலு ஒரு சகாப்தம்

துன் சாமிவேலு பிறந்தநாள் சிறப்பு கட்டுரை குணாளன் மணியம்

கோலாலம்பூர், மார்ச் 8-

புகழை தேடாமல் புரட்சியை ஏற்படுத்திய உன்னத தலைவர் துன் டாக்டர் எஸ்.சாமிவேலு அவர்களின் பிறந்தநாள் இன்று.

கடந்த 1936 மார்ச் மாதம் 8ஆம் தேதி குளுவாங், ஜொகூரில் பிறந்த துன் சாமிவேலு யாருக்கும் அஞ்சாத ஒரு தலைவர் என்றால் அது மிகையில்லை. நாடாளுமன்றத்தில் துன் சாமிவேலு பேசிய வீர வசனங்கள் இன்னமும் சமூக ஊடகங்கள், வலைத்தளங்களில் பார்க்க முடிகிறது. Saya tidak takut kepada siapa siapa Pun என்று அவர் பேசிய வார்த்தைகள் இன்னமும் ஒலித்துக் கொண்டிருக்கின்றன.

இதையெல்லாம் பார்க்க அவர் இன்று நம்மோடு இல்லை என்றாலும் அந்த பழைய நினைவுகள் பசுமரத்தாணி போல இன்னமும் நம்கண்ணே தோன்றி மறைகிறது.

கடந்த 31 ஆண்டுகள் அரசியல் பயணத்தில் பல்வேறு போராட்டங்களை எதிர்கொண்டு
ம.இ.கா என்ற பேரியக்கத்தையும் இந்திய சமுதாயத்தையும் திறம்பட வழிநடத்திய பெருமை
துன் சாமிவேலு அவர்களையே சாரும்.

இன்று மார்ச் 8 துன் சாமிவேலு அவர்களின் பிறந்தநாள். கடந்த 8.3.1939இல் ஜொகூர், குளுவாங்கில் பால்மரம் சீவும் தம்பதியரின் சாதாரண பிள்ளையாக ஒரு ரப்பர் தோட்டத்தில் பிறந்தவர் துன் சாமிவேலு. இவர் ஒரு சகாப்தம் என்று சொல்லும் அளவுக்கு இன்னும் நினைவில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

மஇகாவின் வரலாற்றில் 31 ஆண்டுகள் கட்சியையும் இந்திய சமுதாயத்தையும் திறம்பட வழிநடத்திய ஒரு வரலாற்று நாயகன் துன் டாக்டர் ச.சாமிவேலு. இன்று அவரது பிறந்தநாளில் நாம் நினைவு கூறுவதை பெருமையாக கருத வேண்டும்.

ம.இ.கா வரலாற்றில் 1979 முதல் 2010 வரையில் ஒரு முக்கியமான காலகட்டம். நமது கட்சியையும் இந்திய சமுதாயத்தையும் 31 ஆண்டுகளுக்கு பல்வேறு போராட்டங்களுக்கிடயில் திறம்பட வழிநடத்தியவர் துன் சாமிவேலு.

இந்திய சமுதாய மாணவர்களின் கல்வி முன்னேற்றத்திற்கும் துன் சாமிவேலு பெருமளவில் துணை நின்றவர். இன்று ம.இ.கா எனும் மாபெரும் கட்சி எத்தனையோ போராட்டங்களுக்கிடையிலும் வலிமையுடனும், மக்கள் ஆதரவுடனும் திகழ்வதற்கு அடித்தளம் அமைத்துத் தந்தவர் துன் சாமிவேலு அவர்கள்தான்!

நம் இந்திய சமுதாயமும் யாரையும் அண்டி நிற்காமல் சொந்தக் காலில் நின்று பல்கலைக்கழக உயர் கல்வி பெறவும், நிதிச் சிக்கலால் நம் சமுதாய மாணவர்களின் கல்வி தடைபட்டு விடாமல் தொடர்வதற்கும், துன் சாமிவேலு அவர்கள் அமைத்துத் தந்த எம்ஐஇடி, ஏய்ம்ஸ்ட் பல்கலைக் கழகம் ஆகியவை இன்று ம.இ.காவின் முக்கிய நிதி ஆதாரங்களாகத் திகழ்கின்றன.

துன் சாமிவேலு அவர்களைப் போன்று ம.இ.கா சமுதாயப் போராட்டத்தை முன்னெடுக்கு வேண்டும் என்று இந்த வேளையில் உறுதி கொள்வோம்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button