
வைரமுத்துவுக்கு பெருந்தமிழ் விருது சாதித்து விட்டனர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்- டத்தோஸ்ரீ சரவணன்
தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
கோலாலம்பூர் மார்ச் 10- கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு “பெருந்தமிழ்” விருது விழாவை நடத்தி சாதித்து விட்டனர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்- டத்தோஸ்ரீ சரவணன்.
தம்பி உடையான் படைக்கு அஞ்சான் என்பதை வலியுறுத்திய ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் புத்ரா உலக வாணிப மையத்தில் அரங்கம் நிறைந்த மக்கள் வெள்ளத்தில் கவிப்பேர்ரசு வைரமுத்முவுக்கு பெருந்தமிழ் விருது வழங்கி கௌரவித்ததோடு ஒரு லட்சம் வெள்ளி சன்மானபும் வழங்கினர்.

ஒரு மாபெரும் தமிழ் படைப்பை 12 ஆய்வாளர்கள் ஆய்வு செய்து மகா கவிதை என்ற புத்தகத்தை எழுதிய கவிப்பேரரசு வைரமுத்துவிற்கு “பெருந்தமிழ்” விருது விழா இனிதே அரங்கம் நிறைந்து நடைபெற்றது. சாதித்து விட்டனர் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன்- டத்தோஸ்ரீ சரவணன்.
தமிழுக்காக நடக்கும் விழாவிற்கு தமிழர் கூட்டம் நிறைந்து வந்து அதை நடத்தி காட்டினர்.
ஒரு சிலர் இந்த விழா நடக்குமா ? எப்படி நடக்கும் என கேள்வி எழுப்பிய நிலையில் , தமிழுக்காக நடக்கும் விழாவை நடத்தி காட்டினார் ம.இ.காவின் துணை தலைவர் சொல் வேந்தர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன்.



