Malaysia

பேராக் மாநில இந்திய சமூகநல பண்பாட்டு இயக்கம், பேராக் மாநில இஸ்லாம் சமய இலாக்கா ஆகியவை இணைந்து 100 மாணவர்களுக்கு பள்ளி பொருட்களை வழங்கினர்

ப்போ, மார்ச் 11-
பேராக் மாநில இந்திய சமூகநல பண்பாட்டு இயக்கமும் பேராக் மாநில இஸ்லாம் சமய இலக்காவும் இணைந்து 100 மாணவர்களுக்கு நேற்று பள்ளி மாணவர்களுக்கான சீருடைகளையும் காலணிகளையும், பள்ளி பைகளையும் வழங்கினர்.

பேராக் மாநில இந்திய சமூகநல பண்பாட்டு இயக்கத்தின் தலைவர், பி.பாலையாவின் தலைமைத்தூவத்தில் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்வு நடத்தப்ட்டு வருகிறது.

மலேசிய தகவல் துறையும், ஒற்றுமை துறையும், தாமான் புந்தோங் ஜெயா ருக்குன் தெத்தாங்கா, ஈப்போ கிந்தா சமூகநல , மண்பாட்டு, விளையாட்டு துறை இயக்கம் இணைந்து மீண்டும் பள்ளிக்கு செல்லலாம் என்ற நிகழ்ச்சியை சிறப்பாக நடத்தினர்.

இதனிடையே,  பி.பாலையா பேசுகையில், சிரமமான குடும்பத்தை சேர்ந்த மாணவர்களுக்கு பள்ளிக்கு தேவையான உதவிகளை செய்வதில் பெருமிதம் அடைகிறேன். அதே வேளை , பேராக் மாநில இஸ்லாமிய துறை இயக்குனர், துவான் ஹாரித் பாடசிலா ஹாஜி அப்துல் ஹாலிம் அவர்களுக்கு எனது நன்றியை சமர்ப்பிக்கிறேன் என்றார்.

இந்த நிகழ்வில் பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசனின் அதிகாரி முத்துசாமி, துவான் ஹாஜி சகாரியா, மாவட்ட ஒற்றுமை துறை அதிகாரி, புவான் அசிரா , பெர்கேசோ அதிகாரி முகமட் பாரின் , சார்ஜன் விக்னேஸ்வரன், ஈப்போ கிந்தா சமூகநல, பண்பாட்டு மற்றும் விளையாட்டு துறை சங்கத்தின் தலைவர், பி.யுவராஜ்,  ஐயா மாணிக்கம், உட்பட பலர் சிறப்பு வருகை புரிந்தனர்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button