Malaysia

ஐந்தாம் படிவ மாணவர்களுகளுக்காக கணிசமான தொகையை பள்ளிச் செலவிற்காக வழங்கிய கந்தன் ஸ்ரீ கல்லுமலை காளியம்மன் ஆலயம்

ஈப்போ, மார்ச் 11-
பள்ளிக்கு செல்லும் மாணவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டு செலவினங்கள் இருக்கவே செய்கிறது. அந்த வகையில் சிம்மோர் கந்தன் ஸ்ரீ கல்லுமலை காளியம்மன் ஆலய நிர்வாகத்தினர் ஐந்தாம் படிவ மாணவர்களுக்கு கணிசமான தொகையை வழங்கினர்.

பள்ளி பிள்ளைகளுக்கு இந்த உதவி தொகையொ வழங்குவதில் ஆலய நிர்வாகம் பெருமிதம் கொள்கிறது. இந்த மாணவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வதில் மகிழ்ச்சியே என ஆலயத்தின் தலைவர், தியாகராஜன் கெங்கன் செய்தியாளரிடம் தெரிவித்தார்.

தொடர்ந்து ஆலயம் சமூக உதவிகளையும் மக்களுக்கு செய்யவும் திட்டங்கள் உள்ளன. இது நம்முடைய கடமையாகும். சமயம் தவிர்த்து இது போன்ற சமூக பணிகளையும் ஆலயங்கள் செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button