
Malaysia
தேசிய வகை கம்போங் சீமி தமிழ்ப்பள்ளியில் 25 மாணவர்கள் ஒன்றாம் ஆண்டில் பதிவு என்.கற்பகவள்ளி தகவல்
ஈப்போ, மார்ச் 11-
ஈப்போ கம்போங் சீமி எனும் இடத்தில் சாலை பிரதான பகுதில் அமைந்திருக்கும் தேசிய வகை கம்போங் சீமி பள்ளியில் 2024 ஆம் ஆண்டு 25 இளம் தளிர்கள் பதிவு செய்துள்ளனர்.

அம்மாணவர்களுக்கான பதிவு நேற்று அப்பள்ளியில் நடைபெற, பெற்றோர்கள் வருகை புரிந்து தலைமைமாசிரியர் என். கற்பகவள்ளியிடம் தகவல்களை பெற்றனர்.
இதனிடையே, இப்பள்ளியில் பதிவு செய்த பெற்றோர்களை கற்பகவள்ளி பாராட்டினார்.
தமிழ்ப்பள்ளிக்கு பிள்ளைகளை அனுப்பும் பெற்றோர்கள் பாராட்டக்குரியவர்கள். மொழியே நம்முடைய முக்கிய அடையாளம். அதனை பேணிக்காக்க பெற்றோர்களும் பங்காற்ற வேண்டும் என்றார்.

இப்பள்ளியில் மாணவர்களுக்கான அனைத்து வசதிகளும் சிறபபாக அமைந்துள்ளதாக பெற்றோர்கள் கூறினர்.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



