Malaysia

Wedding Professionals Alliance Malaysia WPAMமின் திருமண கண்காட்சி வர்த்தக தொடர்பை ஏற்படும் தலைவர் வேதகுமார் ராஜகோபால் நம்பிக்கை

தேசம் செய்திகள் ரேவதி குணாளன் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ் குணாளன்

கோலாலம்பூர், மார்ச் 11-
திருமணம் சொர்க்கத்தில் நிச்சயிக்கப்படுகிறது என்று கூறுவார்கள். சொர்க்கம் என்பது எப்படி இருக்கும் என்பதை உங்களால் உணர முடிகிறதா? சொர்க்கம் அந்தளவுக்கு அரண்மணை போல் மிகவும் அழகாக இருக்கும். அந்த சொர்க்கத்தை நம் கண்முன் கொண்டு வருவதுதான் திருமண வல்லுநர்களின் தலையாய கடமையாகும்.

இந்த அனைத்து திருமண ஏற்பாடுகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டு வரும் மாபெரும் முயற்சியை WPAM எனும் Wedding Professionals Alliance Malaysia நிறுவனம் முன்னேடுத்துள்ளது. WPAMமின் இம்முயற்சியில் புகைப்படக் கலைஞர்கள், வீடியோகிராஃபர்கள், கேட்டரிங் உரிமையாளர்கள், ஓப்பனையாளர்கள், அலங்கார பொருள் நடத்துநர்கள் மற்றும் அனைத்து திருமண தொழில் சம்பந்தப்பட்ட வல்லுநர்களுக்கு இடையில் ஒரு தொடர்பை ஏற்படுத்தும் நோக்கத்தில் எதிர்வரும் ஜூலை 19ஆம் தேதி கேஎல்சிசியில் மாபெரும் திருமண கண்காட்சி நடைபெறவிருப்பதாக அதன் தலைவர் வேதகுமார் கூறினார்.

இந்த WPAM நிறுவனம் ஏற்பாடு செய்யவுள்ள திருமண கண்காட்சி தொடர்பான செய்தியாளர் சந்திப்பு கடந்த மார்ச் 7ஆம் தேதி Sony மற்றும் Prime Dairy நிறுவனங்களின் ஆதரவுடன் கோலாலம்பூர், தாமான் வாயு KIP ஹோட்டலில் நடைபெற்றது. இந்த சிறப்பு செய்தியாளர் சந்திப்பின் வழி திருமண வல்லுநர்கள் உற்சாகம், புதுமை மற்றும் நெட்வொர்க்கிங் வாய்ப்புகள் நிறைந்த ஒரு நாளை வெற்றிகரமாக அனுபவித்தனர். இதில் சோனி நிறுவனம், Prime Dairy மற்றும் KIP Hotel உணவகமான Taj flavours ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இந்த திருமண கண்காட்சியில் சுமார் 400 திருமண முகவர்கள் பங்கேற்கவிருக்கின்றனர். இதில் திருமண முகவர்களுக்கு இடையில் நல்ல ஒரு தொடர்பும் வர்த்தக வாய்ப்பும் ஏற்படுவதன் வழி திருமண முகவர்கள் ஒன்றிணைந்து செயல்பட முடியும் என்று வேதகுமார் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்த திருமண கண்காட்சியின் வழி திருமணத் துறை நிபுணர்களிடையே தொடர்பும் வர்த்தக பகிர்வும் ஒத்துழைப்பும் ஏற்படும். WPAM 2024இல் மலேசியா முழுவதும் உள்ள திருமண தொழில் வல்லுநர்கள், அதன் ஏற்பாட்டாளர்கள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு அதன் தொடர்பை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

இந்த திருமண கண்காட்சி நிகழ்வில் பங்கேற்பாளர்கள் வர்த்தகப் பகிர்வு, தொழில்துறை பகிர்வு, நடைமுறை பயிற்சி பகிர்வு, ஆக்கப்பூர்வமான நுட்பங்கள், வணிக வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளிட்ட கூட்டாண்மை வாய்ப்புகளை ஏற்படுத்தி பயனடையலாம்.

இந்த WPAM 2024 நிகழ்வில் பட்டறைகள், குழு விவாதங்கள், குழுவை உருவாக்கும் நடவடிக்கைகள் மற்றும் கவர்ச்சியான இரவு விருந்து ஆகியவை இடம்பெறவுள்ளன.
மேலும் ஒப்பனை கலை மன்றங்கள், புகைப்படம் எடுத்தல் மற்றும் வீடியோகிராஃபி விவாதங்கள், சோனி டச் மற்றும் முயற்சி அமர்வு ஆகியவை அடங்கும்.
ஆகையால், WPAM 2024இல் எங்களுடன் சேர்ந்து உங்கள் திறமைகளை உயர்த்தவும், உங்கள் வர்த்தக தொடர்பை விரிவுபடுத்தவும், திருமணங்களின் கலைத்திறனைக் கொண்டாடவும் திருமண வல்லுநர்கள் அழைக்கப்படுவதாக WPAM 2024 செய்தியாளர் சந்திப்பில் வேதகுமார் தெரிவித்தார்.
தொடர்புக்கு Admin-0 12-476 7477

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button