
டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக நியமனம்
தேசம் செய்திகள் குணாளன் மணியம் ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்
சுங்கை பட்டாணி,மே 25-
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் 15ஆவது ஆண்டு பட்டமளிப்பு விழாவில் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் பல்கலைக்கழகத்தின் இணை வேந்தராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் டத்தோஸ்ரீ சரவணன் அவர்களுக்கு நியமன சான்றிதழை எடுத்து வழங்கினார்.
டத்தோஸ்ரீ சரவணன் 1990களில் அரசியலில் ஈடுபாடு கொண்டு படிப்படியாக முன்னேறியவர். ம.இ.கா கிளைத்தலைவர், தொகுதி தலைவர், செனட்டர், துணையமைச்சர் மற்றும் அமைச்சர் நிலைக்கு உயர்ந்தார்.
டத்தோஸ்ரீ சரவணன் அவர்களின் ஆற்றலும் திறனும் அவருக்கு இணை வேந்தர் நியமனத்தை தேடித்தந்துள்ளது.
துன் ச.சாமிவேலுவின் உருவச்சிலை நேற்று ஏய்ம்ஸ்ட் பல்கலைகழக முன் வளாகத்தில் வைக்கப்பட்டு நடத்தப்படும் முதல் பட்டமளிப்பு விழாவான இதில் ஏய்ம்ஸ்ட் பல்கலைகழகத்தின் இணை வேந்தராக டத்தோ ஸ்ரீ எம். சரவணன் பொறுப்பேற்பது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.



