Malaysia

மக்கள் மஇகாவை திரும்பி பார்க்க ஆரம்பித்து விட்டார்கள்; பதவியில் இருப்பவர்கள் கட்சிக்கும் சமுதாயத்திற்கும் உழைக்க வேண்டும்: தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வேண்டுகோள்

தேசம் செய்திகள் குணாளன் மணியம்,
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்

கோலாலம்பூர், ஜூன் 8-
மக்கள் ம.இ.கா எனும் மாபெரும் கட்சியை திரும்பி பார்க்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளதால் இதனை தற்காத்துக் கொள்ள அனைவருத் பாடுபட வேண்டும் என்று ம.இ.கா தேசிய தலைவர் தான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மஇகாவில் வெற்றி பெறுவது முக்கியம் அல்ல. கட்சிக்காகவும் சமுதாயத்திற்காவும் கடுமையாக உழைக்க வேண்டும். எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அனைவரும் தயாராக வேண்டும் என்று மஇகாவின் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவின் வேட்புமனு தாக்கல் நிகழ்வில் உரையாற்றிய போது தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் இவ்வாறு கேட்டுக் கொண்டார்.

மஇகாவில் பதவி எடுப்பது முக்கியம் அல்ல. கட்சிக்கும் சமுதாயத்திற்கும் உழைக்கத் தயாராக இருக்க வேண்டும்.
மஇகா ஒரு சுயநல, ஜாதி கட்சி அல்ல. இதுவொரு பொதுநலக் கட்சி. இதை அனைத்து தரப்பினரும் புரிந்து நடந்துக் கொள்ள வேண்டும்.

ம.இ.கா தலைமையகம் நேதாஜி மண்டபத்தில் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவின் வேட்புமனு தாக்கல் சுமூகமான முறையில் நடைபெற்றது. தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் வேட்பு மனுக்களை பெற்றுக் கொண்டார்.

இதில் இளைஞர், மகளிர், புத்ரா ஆகிய பிரிவில் போட்டிகள் இல்லை. அதே வேளையில் புத்ரி பிரிவில் மட்டும் போட்டி நடக்கிறது. வெற்றிப் பெற்றவர்களுக்கு தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் தனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்.

இந்தப் போட்டிகள் சுமூகமான முறையில் நடைபெற வேண்டும்.
அதே வேளையில் இளைஞர், மகளிர், புத்ரா, புத்ரி பிரிவினரிடையே பிளவுகள் இருக்கக் கூடாது. இதன் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் இந்த நான்கு பிரிவுகளும் சந்திப்புக் கூட்டங்களை நடத்த வேண்டும்.

இந்த கூட்டம் வாயிலாக பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும் என்பதால் வாரம் ஒரு முறை கண்டிப்பாக கூட்டம் நடத்தப்பட வேண்டும் என்று தான்ஸ்ரீ விக்னேஸ்வரன் கேட்டுக் கொண்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button