
நேசா கூட்டுறவு கழகத்தின் வீடமைப்பு திட்டம் ரந்தாவ், கோல சாவா தாமான் நேசா டெலிமாவில் நிறைவு பெற்றுள்ளது துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையில் ஜூன் 15ஆம் தேதி சாவி வழங்கும் நிகழ்வு
நேசா கூட்டுறவு கழகத்தின் வீடமைப்பு திட்டம்
ரந்தாவ், கோல சாவா தாமான் நேசா டெலிமாவில் நிறைவு பெற்றுள்ளது
துணையமைச்சர் டத்தோ ரமணன் தலைமையில் ஜூன் 15ஆம் தேதி சாவி வழங்கும் நிகழ்வ
தேசம் செய்திகள் குணாளன் மணியம்
ரேவதி குணாளன்
ஒளிப்பதிவு-படங்கள் ஹரி ஸ்ரீநிவாஸ்
ரந்தாவ், ஜூன் 13-
மக்களுக்கு வீடமைப்பு திட்டம் அவசியம் தேவை என்பதை உணர்ந்து வீடமைப்பு திட்டங்களை மேற்கொண்டு வரும் நேசா கூட்டுறவு கழகம் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கிய திட்டம்தான் இந்த ரந்தாவ், கோல சாவா வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்ட தாமான் நேசா டெலிமா வீடமைப்பு திட்டம்.
நேசா கூட்டுறவு கழகத்தின் இயக்குநர் வாரியத் தலைவர் திரு.சசிகுமாரின் தலைமைத்துவத்தில் நேசா கூட்டுறவு கழகம் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டு வரும் நிலையில் தாமான் நேசா டெலிமா வீடமைப்பு திட்டம் திட்டமிட்டபடி 3 ஆண்டுகளில் நிறைவு பெற்றுள்ளது.
இந்த தாமான் நேசா டெலிமா வீடமைப்பு திட்டம் மொத்தம் 68 வீடுகளை உள்ளடக்கியிருக்கிறது. இதில் 62 இணை வீடுகளும் 6 பங்களா வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. நேசா இயக்குநர்களின் ஒத்துழைப்போடு கட்டப்பட்டுள்ள இந்த தாமான் நேசா டெலிமா வீடமைப்பு திட்டத்தில் பங்கெடுத்துள்ளவர்களுக்கு சாவி வழங்கும் நிகழ்வு ஜூன் 15ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தொழில்முனைவோர் கூட்டுறவு மேம்பாட்டு துணையமைச்சர் டத்தோ ஆர்.ரமணன் தலைமையில் நடைபெறவுள்ளது.
இந்த தாமான் நேசா டெலிமா வீடமைப்பு திட்டத்தில் வீடு வாங்கியுள்ளவர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சாவி வழங்கும் நிகழ்வை முன்னிட்டு வீடமைப்பு வளாகத்திலேயே மடானி விற்பனை மையம் ஒன்றும் காலை 10 மணி தொடங்கி நடைபெறவுள்ளது. இதில் பல்வேறு அத்தியாவசிய பொருட்கள் விற்பனைக்கு இருப்பதில் வருகையாளர்கள் அல்லது பொதுமக்கள் அப்பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.

இந்த தாமான் நேசா டெலிமா வீடமைப்பு திட்டத்திற்கான சாவி வழங்கும் நிகழ்வில் துணையமைச்சர் ரமணனுடன் நேசா வாரியத் தலைவர் சசிகுமார், நேசா கூட்டுறவு கழக செயலாளர் ஆதி நாராயண் ராவ், கூட்டுறவு துறை ஆணைய அதிகாரிகள், நெகிரி செம்பிலான் மாநில அரசாங்க அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்பதால் நேசா கூட்டுறவு கழக உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் திரளாக கலந்து கொள்ளும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.



