Malaysia

ரவாங் Pangsapuri Kos Sederhana, Taman Bukit Rawang Putra அடுக்குமாடி பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காண நடவடிக்கை எடுங்கள் குடியிருப்பாளர் சங்கத் தலைவர் விக்னேஸ்வரன் வேண்டுகோள்

தேசம் செய்திகள் ரேவதி குணாளன்

ஒளிப்பதிவு-படங்கள் ஹரி ஸ்ரீநிவாஸ்

ரவாங், ஜூன் 13-.

ரவாங் Pangsapuri Kos Sederhana, Taman Bukit Rawang Putraவில் நிலவி வரும் பல்வேறு அடிப்படை பிரச்சினைகளுக்கு விரைந்து தீர்வு காணப்பட வேண்டும் என்று Persatuan Penduduk Pangsapuri Kos Sederhana, Taman Bukit Rawang Putra தலைவர் விக்னேஸ்வரன் பலராமன் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த தாமான் புக்கிட் ரவாங் புத்ராவில் தண்ணீர் விநியோகப் பிரச்சினை கடந்த 25 ஆண்டுகளாக இருந்து வருகிறது. இங்கு தண்ணீர் விநியோகம் மேல் மாடி வீடுகளுக்கு குறைந்து காணப்படுகிறது. தண்ணீர் விநியோகம் அழுத்தம் காரணமாக செல்லவில்லை. இது நீண்ட காலபிரச்சினையாகும். மேலும் இந்த குடியிருப்பில் பல பிரச்சினைகள் தலைதூக்கியிருந்ததால் இப்பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் கடந்த ஜனவரி மாதம் Persatuan Penduduk Pangsapuri Kos Sederhana, Taman Bukit Rawang Putra எனும் சங்கத்தை தொடங்கியதாக விக்னேஸ்வரன் தேசம் ஊடகத்திடம் தெரிவித்தார்.

இந்த சங்கம் தொடங்கப்பட்ட நிலையில் கடந்த மே மாதம் 5ஆம் தேதி காவல்துறை, செலாயாங் நகராண்மைக்கழகம், Air Selangor, SPRM, குடிநுழைவு துறை, Bombs துறை உள்ளிட்ட பலதுறைகளுடன் ஒரு கலந்துரையாடல் நடத்த முறையாக அழைப்பு கடிதம் வழங்கியதாக விக்னேஸ்வரன் சொன்னார்.

இந்நிலையில் இந்த சந்திப்பு நிகழ்வு திட்டமிட்டபடி மே 5ஆம் தேதி நடைபெற்றது. இதில் எங்களின் ஆலோசகராக Pertubuhan 5k Komuniti Pandan Selangor அமைப்பில் தலைவர் திரு.சிவா வருகை தந்திருந்தார். மேலும் IPD கோம்பாக் காவல்துறை அதிகாரிகள், Air Selangor அதிகாரிகள், ரவாங் காவல்துறை தலைவர் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

Taman Bukit Rawang Putra அடுக்குமாடி வீடமைப்பு குடியிருப்பாளர்கள் நீண்ட காலமாக எதிர்நோக்கி வந்த பிரச்சினைகள் குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பில் அடுக்குமாடி மேம்பாட்டாளர்களுடன் பேச்சு நடத்தி தீர்வு காண முயற்சி மேற்கொள்ளவிருப்பதாக அவர்கள் உறுதியளித்தனர்.

இந்த கலந்துரையாடல் நிகழ்வுக்கு பிறகு நோன்பு பெருநாள் விருந்துபசரிப்பு நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button