InternationalMalaysia

கொழும்பு கம்பன் விழாவில் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோ ஸ்ரீ எம். எம்.சரவணன் பங்கேற்கிறார்

கோலாலம்பூர்,ஜூன் 14-

நான்கு வருடங்களுக்குப் பிறகு இலங்கை கொழும்புவில் மலரும் கம்பன் விழாவில் ம.இ.கா தேசிய துணைத்தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கெளரவ விருந்தினராகக் கலந்து கொண்டு இலக்கிய உரையாற்றவுள்ளார்.

உலகத் தமிழர்கள் கொண்டாடும் உன்னத மனிதராக தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ சரவணன் விளங்குகிறார். உலகின் எந்த மூலை முடுக்கானாலும் தமிழும், தமிழ் சார்ந்த உறவுகளும் இருக்கும் இடத்தில் இவருக்கென ஒரு ரசிகர் கூட்டமே இருப்பதைப் பல வேளைகளில் நாம் கண்கூடாகக் காண முடிகிறது. 

அகில இலங்கைக் கம்பன் கழகம் ஏற்பாட்டில் 4 ஆண்டுகளுக்குப் பின் மலரும் கம்பன் விழா மிகவும் விமரிசையாக, உள்நாட்டு வெளிநாட்டுத் தமிழ் அறிஞர்களின் வருகையால் கலைகட்ட விருக்கிறது.  

அந்த விழாவில் கலந்து கொள்ள தனது குழுவோடு செல்லவிருக்கும் டத்தோ ஸ்ரீ மலேசியத் தமிழர்களின் பெருமையை கடல் கடந்தும் நிலைநாட்டி வருகிறார் என்பதில் ஐயமில்லை.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button