
எஸ்.பி.எம் தேர்வில் 10ஏ, 9ஏ பெற்ற ரவூப் பகாங்கை சேர்ந்த சாதனை மாணவர்கள் ஜெர்மன் மொழியில் மாணவி தர்ஷினி ஏ பெற்று சாதனை
எஸ்.பி.எம் தேர்வில் 10ஏ, 9ஏ பெற்ற ரவூப் பகாங்கை சேர்ந்த சாதனை மாணவர்கள்
ஜெர்மன் மொழியில் மாணவி தர்ஷினி ஏ பெற்று சாதனை
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ரவூப், ஜூன் 13-
எஸ்.பி.எம் தேர்வு முடிவுகள் வெளிவந்து 2 வாரங்கள் ஆன நிலையில் தேர்வில் ஏ பெற்று சாதனை படைத்த மாணவர்களின் தகவல்கள் அவ்வப்போது தேசம் ஊடகத்திற்கு வந்து கொண்டுதான் இருக்கிறது
⁹
அந்த வகையில் ரவூப், பகாங் மாநிலத்தை சேர்ந்த மாணவர்கள் எஸ்.பி.எம் தேர்வில் சிறப்பு தேர்ச்சி பெற்று பள்ளிக்கும் குடும்பத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதை பார்த்து அவர்களுக்கு ஊக்கம் வழங்கும் நோக்கத்தில் அவர்களின் சாதனைகளை தொடர்ந்து வெளியிட்டு வருகிறோம்.
அந்த வகையில் ரவூப் மாமுட் இடைநிலைப் பள்ளியைச் சேர்ந்த மாணவி அமிர்தா எம்.ரமேஷ் தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் உள்ளிட்ட 10 பாடங்களில் ஏ பெற்றுள்ளார். தாமான் ரவூப் ஜெயாவை சேர்ந்த மாணவி அமிர்தா தமிழ் மொழி, தமிழ் இலக்கியம் ஆகிய பாடங்களில் ஆர்வம் கொண்டு படித்து தேர்வுக்கு அமர்ந்த நிலை அந்த இருபாடங்களிலும் மற்ற பாடங்களிலும் 10ஏக்கள் பெற்றுள்ளார். அமிர்தா உயர்கல்வி பயில எண்ணம் கொண்டுள்ளார். இந்நிலையில் maktab rendah sains Mara Run Ghazali Safie இடைநிலைப்பள்ளியை சேர்ந்த மாணவி தர்ஷினி ராமநாயுடு தான் தேர்வுக்கு அமர்ந்த 9 பாடங்களிலும் 9ஏக்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். உயர் கல்வி படிக்க எண்ணம் கொண்டுள்ள தர்ஷினி பெற்றோர் வழங்கிய ஊக்கம், ஆசிரியர்கள் கொடுத்த கல்வி அரவணைப்பு ஆகியவற்றால் தன்னால் 9 பாடங்களிலும் ஏக்கள் பெற முடிந்ததாக தெரிவித்தார்.
ஒரு இந்திய மாணவி ஜெர்மன் மொழியை ஒரு பாடமாக எடுத்து அதில் ஏ பெற்றுள்ள ஒரு ஆச்சர்யம்தான். ரவூப் பகுதியை சேர்ந்த மாணவி நிவிதா ராமசாமி. இவர் செந்தூல் உத்தாமா இடைநிலைப்பள்ளியில் படித்து வருகிறார். இவருக்கு ஜெர்மன் மொழியில் மிகுந்த ஆர்வம். அதனை ஒரு பாடமாக எடுத்து படித்து அதில் ஏ பெற்றுள்ளது முத்தாய்ப்பு சாதனையாகும். மேலும் தேர்வுக்கு அமர்ந்த இதர பாடங்களிலும் ஏக்கள் பெற்றுள்ளார். இவர் தேர்வுக்கு அமர்ந்த 10 பாடங்களில் 9 பாடங்களில் ஏக்களும. ஒரு பாடத்தில் B+சும் பெற்றுள்ளார்.
இந்நிலையில் ஒரு லாரி ஓட்டுநரான தன் தந்தை மற்றும் சாதாரண தொழிலாளி வேலை செய்யும் தாயாரின் கஷ்டங்களை உணர்ந்து படித்த maktab rendah sains Mara Run Ghazali Safie இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த மாணவர் பவித்திரன் சதாசிவம் தான் எஸ்.பி.எம் தேர்வில் 4 ஏக்கள் பெற்றதை பெருமையாக நினைத்து பகிர்ந்து கொண்டார். வசதி குறைந்த நிலையில் படித்த பவித்ரன் எதிர்காலத்தில் கணக்கியல் நிபுணராக வருவதற்கு எண்ணம் கொண்டு அதற்கான அடிப்படை கல்வியை படிக்க தயாராகி வருகிறார்.
எஸ்.பி.எம் தேர்வு என்பது மாணவர்களின் உயர்கல்வி ஒரு அடித்தளமாகும். மாணவர்கள் சரியான துறையை தேர்வு செய்து படிக்க வேண்டும். அதேநேரத்தில் தோல்வியை தழுவிய மாணவர்கள் Tvet போன்ற தொழில்திறன் பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று தேசம் ஊடகம் கேட்டுக் கொள்கிறது.



