Malaysia

டிஸ்லெக்ஸியா” என்ற கற்றல் குறைபாட்டை மாணவர்களுக்கு தீர்வு காண்போம்

தேசம் செய்திகள் ஆர்.பாலசந்தர்

ஈப்போ, ஜுன் 21-

இவ்வட்டாரத்தில் நன்கு பிரதிசித்து பெற்று மனிதநேய சேவைகளை ஈப்போ கிரீன்டவுன் ரோத்திரி கிளப் அன்பர்கள். வழங்கி வருகின்றனர்.

இந்நாட்டில் 10 சதவீத மாணவர்கள்
“டிஸ்லெக்ஸியா” என்ற கற்றல் குறைப்பாடு பிரச்சினையை எதிர்தோக்கி வருவதாக ஆய்வு கூறுகிறது. இவ்விவகாரம் குறித்த விழிப்புணர்வு பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக் களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் என்ற உன்னத நோக்கத்திற்கு ஈப்போ பாத்திமா தனியார் மருத்துவமனையில் பயிற்சி பட்டறை ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக ஈப்போ கிரீன்டவுன் ரோத்தரி கிளப் தலைவர் நாகராஜன் தண்ணீர்மலை கூறினார்.

இக்கருத்தரங்கு மற்றும் பயிற்சி பட்டறை ஈப்போ கிரீன்டவுன் ரோத்தரி கிளப், மலேசியா டிலெக்ஸியா விவேக இயக்கம்,, மலேசிய மருத்துவ சங்கம் மற்றும் ஈப்போ பாத்திமா தனியார் மருத்துவமனை ஒன்றிணைந்து ஏற்பாடு செய்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இம்மாதிரியான கருத்தரங்கு பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு மிகவும் அவசியமாகும். தற்போது 100 பங்கேற்பாளர்கள் கலந்துக்கொண்டுள்ளனர். இவர்கள் பேராக் மாநிலத்தை தவிர்த்து மற்ற மாநிலங்களிலிருந்தும் வருகையளித்துள்ளனர். இனிவரும் காலங்களில் அங்குள்ள ரோத்திரி கிளப் வாயிலாக மாநிலம் தோறும் நடைபெற ஏற்பாடுகள் செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதன் வாயிலாக விழிப்புணர்வு, புரிந்துணர்வு மற்றும் அமலாக்கம் செய்யும் முறைகள் இங்கே கற்றுதரப்படுகிறது. இந்த டிஸ்லெக்ஸியா பாதிப்பை எதிர்நோக்கும் மாணவர்களை எவ்வாறு அணுகுவது அல்லது அணுகுமுறை, கையாளும் முறைகள் குறித்து அறிந்து கொள்வார்கள்.

இத்திட்டங்கள் அனைத்தும் வகுப்பறை அல்லது வீடுகளில் செயல்படுத்த வழிவகை செய்ய வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

இந்த கருத்தரங்கில் டிஸ்லெக்ஸியா பற்றி டாக்டர் சாண் நாராயணன்,குழந்தை நிபுணத்துவ மருத்துவர் பாத்திமா மருத்துவமனை, டாக்டர் ஜால்டின் முகமட் அலி கல்வியாளர், நிறுவனர் டிஸ்லெக்ஸியா சங்கம், மனோவியலாளர்; டாக்டர் புலான் ஆயு இந்தோனிஷிய டிஸ்லேக்‌ஸியா தலைமை இயக் குநர் ஆகியோர் பங்கேற்பாளர்களுக்கு விரிவுரைஞர்களாக செயல்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

சிறுவர்கள் அல்லது மாணவர்களின் முன்னேற்ற பாதைக்கு உதவிட இம்மாதியான திட்டங்கள் மற்றும் வழிமுறைகளை ஈப்போ கிரீன்டவுன் ரோத்தரி கிளப் செயல்படுத்தி வருவதாக த. நாகராஜன் கூறினார். நம் நாட்டை தவிர்த்து அந்நிய நாடுகளுக்கும் இவ்வதவிகள் சென்றடைய ஏற்பாடுகள் வரையுறுக்கப்படும் என்று அவர் கருத்துரைத்தார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button