Uncategorized

இலவசமாக கார்கழுவும் திட்டம் வாடிக்கையாளர்களை கவர்ந்தன. பெர்சாம் ஏடி நாசி கண்டார் வளாகத்தில் 3 நாட்களுக்கு நடந்தேறின.

ஈப்போ, செப்.31: இங்குள்ள பெர்சாம் ஏடி நாசி கண்டார் வளாகத்தில் இரு இந்திய இளைஞர்கள் கார் கழுவும் தொழிலை கடந்த ஒன்றரை ஆண்டுகளாக செய்து வருகின்றனர். தம் வாடிக்கையாளர்களுக்கு உதவும் பொருட்டு 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, 3 நாட்களுக்கு இலவசமாக காரை கழுவும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக “பிரதர்ஸ் சுனோவ்” நிறுவன உரிமையாளர் கார்த்திக் கூறினார்.

இந்த கார் கழுவும் தொழிலை என்னுடைய நண்பர் சத்தியாவுடன் இணைந்து செய்து வருகிறேன். இந்த ஏடி நாசி கண்டார் வளாகத்தில் செயல்பட்டு வரும் இந்த கார் கழுவும் மையம் போல் மேலும் இரு கிளை நிறவனங்கள் உள்ளன என்று அவர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்களுக்கு உதவும் பொருட்டு, அதாவது நாட்டின் 67 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு கடந்த ஆகஸ்டில் 29, 30 மற்றும் 31 ம் தேதிகளில் இலவசமாக இங்கு வருகையளிக்கும் அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இலவசமாக கார் கழுவும் நடவடிக்கைகள் மேற்கொள் ளப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த கார் கழுவும் திட்டத்தில் மலாய்காரர்கள் இந்தியர்கள் மற்றும் சீனர்கள் பங்கேற்று மகிழ்ந்தனர். இந்த 3 நாட்களுக்கு காலை மணி 8.00 முதல் இரவு மணி 11.00 வரை வாடிக்கையாளர்கள் குவிந்த வண்ணமாக இருந்தனர் என்று அவர் தெரிவித்தனர்.

கடந்த மாதம் தங்களின் பெட்ரோன் கிளை நிறுவனத்தில் வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு தங்க நகைகள் அதிர்ஷ்ட குலுக்கல் போட்டியை ஏற்பாடு செய்து அதன் வாயிலாக வெற்றியாளர்களுக்கு தங்க நகைகள் பரிசாக வழங்கப்பட்டுள்ளதை அவர் சுட்டிக்காட்டினார்.

தங்க நகை அதிர்ஷ்ட குலுக்கல் திட்டம் அடுத்தாண்டு தொடக்கத்தில் இதே பெர்சாம் ஏடி நாசி கண்டாரின் கார் கழுவும் வளாகத்தில் அறிமுகம் செய்யவுள்ளதாக கார்த்தி கூறினார். தொடர்புக்கு கார்த்தி 01116392607 அல்லது சத்தியா 016- 5101496.

இந்த தொழிலை தவிர்த்து மற்ற வணிகத்துறையிலும் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பாக இந்திய இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருப்படுகிறது. அண்மையில் வழிதடுமாறி செல்ல முயற்சித்த 3 இளைஞர்களுக்கு வேலை வழங்கி அவர்களின் தேவையும் நிறைவு செய்யப்பட்டது. இத்தகைய வேலை வாய்ப்புகளின் வாயிலாக நமது இந்திய இளைஞர்களை தீய வழிகளுக்கு செல்லாமல் தடுக்க முடியும் என்று கார்த்தி உறுதியுடன் கூறினார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button