Malaysia

சிம்பாங் பூலாய் கேமரன்மலை சாலையில் மண் சரிவு

ஈப்போ, அக்.25- இங்குள்ள சிம்பாங் பூலாய் கேமரன்மலை செல்லும் சாலையில் 43.4 வது கிலோ மீட்டரில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது. ஆகையால், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் சாலையின் மறுசீரமைப்பு பணிகள் பொருட்டு இச்சாலை நேற்று மாலை 5.00 மணிக்கு மூடப்பட்டுள்ளதாக ஈப்போ மாவட்ட போலீஸ்படை தலைவர் ஏசிபி அபாங் ஹைனல் அபிடின் அபாங் அமாட் கூறினார்.

இச்சம்பவம் பேராக் மற்றும் பகாங் மாநில எல்லையில் ஏற்பட்டுள்ளது. தற்போது இச்சாலையில் துப்புரவு மற்றும் மறுசீரமைப்பு பணிகள் தொடங்கி விட்டன. ஆகையால், பொதுமக்கள் மாற்று வழிகளை பயன்படுத்துமாறு அவர் அறிவுறுத்தினார்.

மேலும் இப்பகுதியில் மண்சரிவு நில அதிர்வுகள் இருந்து வருவதால் இந்த சாலையை போலீஸ்தரப்பினர் முழுமையாக மூடிவிட்டனர். உங்களின் பயணத்தை திட்டமிட்டு் செயல்படவும். அத்துடன் முழுமையான சீரமைப்பு பணிகள் முடிந்தவுடன் சாலையை பயன்படுத்த அறிவிப்புகள் வெளியான பின் சாலையை பயன்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button