
முதல் முறையாக ஈப்போ கிரின்டவுன் கிளினிக்கின் கோலப்போட்டி
ஈப்போ, அக்.25- இங்குள்ள ஈப்போ கிரின்டவுன் கிளினிக்கின் முதல் முறையாக நடைபெற்ற கோலப்போட்டியில் 11 யுனிட்டை சேர்ந்த மருத்துவத்துறை பணியாளர்கள் கலந்துக்கொண்டதாக மகிழ்ச்சியுடன் கூறினார் இந்நிகழ்வின் ஏற்பாட்டுக்குழு தலைவர் மாரியப்பன்.

இந்த கோலப்போட்டியில் இந்த கிளினிக்கின் பல இன மருத்தவர்களும் ஒன்றிணந்து
அவர்கள் தரப்பில் கோலம் போடும் போட்டியில் பங்கேற்றனர். அம்மாதிரியே அனைத்து யுனிட்டை சேர்ந்த பல இன மருத்துவ பணியாளர்கள் ஒன்றிணைந்து ஒற்றுமையாக ஓய்வு நேரங்களில், வேலை நேரம் முடிந்த பின் இந்த கோலம்போடும் நடவடிக்கைகளை மேற்கொண்டனர் என்று அவர் குறிப்பிட்டார்.
இம்மாதிரியான நடவடிக்கைகள் ்மேற்கொள்ளும் பொழுது மருத்துவ பணியாளர்கள் மனஅழுத்தம் தாக்கத்திலிருந்து விடுபட முடியும். அத்துடன் ஒன்றிணைந்து செய்யும் பொழுது ஒற்றுமையும், ஆதரவும், கூட்டுபணி நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படுவதாக அவர் தெரிவித்தார்.
எந்தவொரு பண்டிகை காலங்களிலும் இதுபோன்ற கலை பண்பாட்டு படைப்பு மற்றும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்றால் அனைவருக்கும் நன்மையே என்று மாரியப்பன் தம் தீபாவளி வாழ்த்தினை மலேசிய வாழ் அனைத்து இந்துகளுக்கும் ஈப்போ கிரின்டவுன் கிளினிக் சார்பில் தெரிவித்துக் கொண்டார்.



