Malaysia

தேசிய முன்னனியில் மைபிபிபி கட்சியை மீண்டும் இணைத்துக் கொள்வது குறித்து தேசிய முன்னணி கூட்டத்தில் பேசப்படும் டத்தோஶ்ரீ முகமட் ஹசான் உறுதி

சிரம்பான்,ஆக.6-
ஒவ்வொரு தேர்தல்களிலும் மைபிபிபி கட்சியினர் தேசிய முண்ணனி வெற்றிக்கு கடுமையாக பாடுப்டட்டு வந்துள்ளதால் அதனை தேசிய முன்னனியில் மீண்டும் இணைத்துக் கொள்வது குறித்து தேசிய முன்னணி கூட்டத்தில் பேசவிருப்பதாக அதன் துணைத் தலைவரும் வெளியுறவு அமைச்சருமான டத்தோஶ்ரீ முகமட் ஹசான் கூறினார்.

அவர்கள் தொடர்ந்து தேசிய முண்ணனிக்கு ஆதரவை வழங்குவார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. அதன் அடிப்படையில் மைபிபிபி கட்சி மீண்டும் தேசிய முண்ணனியில் இனைவதற்கு தேசிய முண்ணனி கூட்டத்தில் பேசுவேன் என்று கடந்த ஞாயிற்றுக்கிழமை நெகிரி செம்பிலான் மாநில மைபிபிபி கட்சியின் பேராளர் மாநாட்டை தொடக்கி வைத்த போது டத்தோஶ்ரீ முகமட் ஹசான் அவ்வாறு தெரிவித்தார்.

மைபிபிபி கட்சி ஒரு வலுவான கட்சி. நெகிரி செம்பிலான் மாநிலத்தை பொருத்தவரையில் டத்தோ ஆறுமுகம் தலைமையில் மிகவும் சிறப்பாக செயலாற்றி வருகிறது. ஆகையால், மைபிபிபி கட்சியை தேசிய முன்னணியில் மீண்டும் இணைத்துக் கொள்வது குறித்து தேசிய முன்னணி கூட்டத்தில் பேசுவேன் என்று டத்தோஶ்ரீ முகமட் ஹசான் சொன்னார்.

மைபிபிபி கட்சியின் இடைக்கால தலைவர் டாக்டர் லோகபலா முறையாக கடிதம் அனுப்புமாறு டத்தோஸ்ரீ முகமட் ஹசான் கேட்டுக் கொண்டார்.

மைபிபிபி கட்சி ஒரு சரியான பாதையில் செல்வதற்கு இதுவரை நீங்கள் எங்களுடன்தான் இருக்கிறீர்கள் என்று தேசிய முண்ணனி கட்சி பதில் வழங்கவில்லை என்று டத்தோ டாக்டர் லோகபாலா தமது உரையில் குறிப்பிட்டிருந்தார்.

இதனால் வரும் செப்டம்பர் 1 ஆம் தேதி நடைப்பெறவுள்ள மைபிபிபி கட்சி மாநாடு வரை பார்ப்போம். அப்படி சரியான முடிவு தெரியவில்லை என்றால் கட்சி ஒரு சரியான முடிவை எடுக்கும் என்று டத்தோ லோகபாலா மோகன் கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button