
ம.இ.காவின் மக்கள் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது தான்ஸ்ரீ விக்னேஷ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் பங்கேற்பு
ம.இ.காவின் மக்கள் பொங்கல் விழா மிகவும் கோலாகலமாக நடைபெற்றது தான்ஸ்ரீ விக்னேஷ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் பங்கேற்பு
கோலாலம்பூர், ஜன 15-
மலேசிய இந்தியர்களின் பாரம்பரிய விழாவான பொங்கல் விழா ம.இ.கா ஏற்பாட்டில் ம.இ.கா தலைமையகத்தில் மிகவும் சிறப்பாக நடந்தேறியது.
கார் நிறுத்துமிட வளாகத்தில் பிற்பகல் 2 மணிக்கு பொங்கல் விழா தொடங்கியது. தேசிய தலைமையக பொங்கல், இளைஞர் பிரிவு பொங்கல், மகளிர் அணி பொங்கல் என்று மூன்று பொங்கல் வைக்கப்பட்டது. பொங்கல் பானையில் தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் பொங்கல் பால் ஊற்றினர். பிறகு பச்சரிசி போட்டு பொங்கல் வைத்தனர். இந்த பொங்கல் விழாவில் ம.இ.கா தலைவர்கள், கிளை தலைவர்கள், தொண்டர்கள் என்று ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
இந்த விழாவில் பங்கேற்ற தான்ஸ்ரீ விக்னேஸ்வரன், டத்தோஸ்ரீ சரவணன் ஆகிய இருவருக்கும் ம.இ.கா தலைவர்கள் பொங்கல் வாழ்த்துகளை கைகூப்பி பரிமாறிக் கொண்டனர்.
இந்த விழாவில் கலந்து கொண்ட ம.இ.காவினர் பாரம்பரிய உடைகள் அணிந்திருந்த நிலையில் மக்கள் பொங்கல் பொங்கல் வைத்தனர். இந்த நிகழ்ச்சியி்ல் கலை நிகழ்ச்சிகள் மற்றும் பாரம்பரிய நடனங்களும் நடைபெற்றன.
பொங்கல் விழாவின் சிறப்பை விளக்கிப் பேசிய தன் ஸ்ரீ vigneswaran “பொங்கல் விழா நமது பாரம்பரியத்தையும், ஒற்றுமையையும் கொண்டாடும் ஒரு சிறப்பான வாய்ப்பாகும் என்றும் இந்த விழாவின் மூலம் நமது கலாச்சாரத்தையும், மரபுகளையும் இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்ல வேண்டியது அவசியம்” என்றும் வலியுறுத்தினார்.
மலேசிய இந்தியர்களின் ஒற்றுமைக்கு முக்கியத்துவம் வழங்கும் வகையில் நடைபெற்ற இந்த பொங்கல் விழா சிறப்பாக நடந்தேறியது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசம் செய்திகள் ரேவதி குணாளன்
ஒளிப்பதிவாளர் ஹரி ஸ்ரீநிவாஸ்



