
Malaysia
முதியவர் மரணமடைய காரணமாய் இருந்த பெண்ணுக்கு அபராதம்.
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, நவ.6-
கிளேபாங் எனுமிடத்தின் ஒரு பேரங்காடி நிலைய வாசல் முன் 64 வயது மூத்த.குடிமகன்
மரணமடைய காரணமாய் இருந்ததன் குற்றச்சாட்டு பேரில் 24 வயது பெண்ணுக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் ரிம 2,500
அபராதம் விதித்தது.
நீதியாளர் சித்தி நோரா ஷாரிப் இந்த தண்டனையை விதித்தார். இவர் கடந்த அக்டோபர் மாதம் மாலை 4.20 மணிக்கும் மாலை 5.30 மணி இடையில்
இக் குற்றத்தை புரிந்துள்ளார்.



