Malaysia

MITRA நிதி வெ.25 மில்லியன் பி40 இந்திய மாணவர்கள் 12,400 பேருக்கு வழங்கப்படும்

சுங்கை புலோ, டிச.17-
மலேசிய இந்திய உருமாற்ற திட்டம் MITRA இந்த ஆண்டு வெ.25 மில்லியன் நிதியை பி40 இந்திய மாணவர்கள் 12,400 பேருக்கு வழங்க முடிவு செய்துள்ளது. IPT 4.0 MITRA ஆரம்பப் படிப்புத் திட்டத்தின் கீழ் இந்த உதவி வழங்கப்படும்.

இதுவரையில் நாடு முழுவதும் 12,626 விண்ணப்பங்கள் கிடைத்துள்ளன. அதில் 1088 மாணவர்கள் தகுதி பெற்ற நிலையில், முதல் கட்ட உதவி அடுத்த வாரம் வழங்கப்படும் என்று மித்ராவின் செயற்குழு தலைவர் பி. பிரபாகரன் தெரிவித்தார்.

முதல் கட்ட உதவிக்கு தகுதி பெற்ற 1,088 மாணவர்கள் வெ.2,000 மற்றும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் வெ.3,000 தொகையை Bank Simpanan Nasional (BSN) வங்கி மூலமாக ஒருமுறை பெறுவார்கள் என்று அவர் கூறினார்.

சில மாணவர்களின் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது சில சிக்கல்கள் ஏற்பட்டது. அவற்றில் BSN வங்கி கணக்கு எண் இல்லாமை. (STR)/eKasih/MySalam சான்றுகள், வருமானச் சான்றிதழ் மற்றும் பல்கலைக்கழக உறுதிச் சான்றிதழ் இல்லாதது போன்ற சிக்கல்கள் இருந்தது.

இருப்பினும், இந்த சிக்கல்களை தீர்த்து டிசம்பர் 2024 முதல் மாணவர்களுக்கான உதவி தொகை படிப்படியாக வழங்கப்படும் என்று அவர் உறுதி அளித்தார். மேலும், அடுத்த கட்ட தகுதியாளர்கள் பட்டியல் மித்ராவின் சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும்.

இதனிடையே தொடக்க கல்வி திட்டத்திற்கும்
வெ.9.3 மில்லியன் நிதி 2024/2025 கல்வியாண்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 4,709 இந்திய குழந்தைகள் 183 தனியார் பாலர் பள்ளிகள் பயனடைந்துள்ளனர். அந்த வகையில் Tadika Genius Bersinar பாலர் பள்ளிக்கு இத்திட்டத்தின் கீழ் மட்டும் வெ.277,200 நிதி சுமார் 126 குழந்தைகளுக்கு வழங்கப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் Tadika Genius Bersinar பாலர்பள்ளியின் 6 வயதுடைய குழந்தைகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பிரபாகரன், மித்ராவின் தொடக்க கல்வி திட்டம் B40 குடும்பங்களின் சுமையை குறைத்து, குழந்தைகளின் கல்விக்கான அடித்தளத்தை வலுப்படுத்த உதவுவதாகக் கூறினார்.

இந்த திட்டங்கள், இந்திய சமூகத்தின் கல்வி முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் என்று அவர் தெரிவித்தார்..

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button