Malaysia

பத்துமலை ஆற்றங்கரையில் 20 அடி உயரத்தில் வேல் பக்தர்கள் அதனை வணங்கி நேர்த்திக்கடனை தொடங்கலாம் தான்ஸ்ரீ நடராஜா தகவல்

பத்துமலை,பிப்.3-
பத்துமலை ஆற்றங்கரையில் நிறுவப்பட்டுள்ள 20 அடி உயர வேல் பக்கர்கள் நேர்த்திக்கடன் செலுத்த ஒரு தொடக்கமாக இருக்கும் என்று கோலாலம்பூர் ஸ்ரீ மகாமாரியம்மன் தேவஸ்தான தலைவர் தான்ஸ்ரீ ஆர்.நடராஜா கூறினார்.

இந்த வேல் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்ய வரும் பக்தர்களுக்கு துணை நிற்கும். இந்த வேல் பக்தர்களுக்கு ஒரு தொடக்கமாக இருக்கும் என்று தான்ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.

பத்துமலையில் தைப்பூச திருவிழா வரும் பிப்ரவரி 11ஆம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. இந்நிலையில் பக்தர்கள் முன்கூட்டியே தங்களது நேர்த்திக்கடனை பூர்த்தி செய்து வரும் நிலையில் பத்துமலை ஆற்றங்கரையில் வேல் நிறுவப்பட்டுள்ளது.

பக்தர்களின் வசதிக்காக பத்துமலை ஆற்றங்கரை சுத்தம் செய்யப்பட்டுள்ளது. இங்கிருந்து பக்தர்கள் தங்களை நேர்த்திக் கடனை தொடங்குகின்றனர்.
இதனால் பக்தர்களின் கோரிக்கைக்கு ஏற்ப ஆற்றங்கரையில் வேல் நிறுவப்பட்டுள்ளதாக தான்ஸ்ரீ நடராஜா சொன்னார்.

பத்துமலையில் தேவஸ்தானம் வேல் ஒன்றை நிறுவி ஞாயிற்றுக்கிழமை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தது.
இந்த வேல் 20 அடி உயரத்தில் நிறுவப்பட்டுள்ளது.
இந்த வேல் நேர்த்திக் கடனை பூர்த்தி செய்யும் பக்தர்களுக்கு பெரும் துணையாக இருக்கும்
என்று தான்ஸ்ரீ நடராஜா குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button