
MalaysiaInternational
Majlis Media Malaysia எனும் ஊடகவியளார்கள் மன்றம் ஊடகவியலாளர்கள் நலன் பேணும் தீபகற்ப ஊடகவியலாளர் சங்கம் நம்பிக்கை
கோலாலம்பூர்,பிப்.28-
ஊடகவியலாளர்கள் நலன் காக்க தகவல் தொடர்பு அமைச்சு டேற்கொண்டுள்ள தேசிய ஒன்றியம் அமைக்கும் முடிவானது ஊடகவியலாளர்களின் ஊடக சுதந்திரம் மற்றும் எண்ணங்களை ஈடேற்றும் ஒரு தலமாக அமையும் என்று தீபகற்ப ஊடகவியலாளர்கள் சங்கம் வர்ணித்துள்ளது.
மலேசிய ஊடகங்கள் ஒரு ஒழுங்குமுறை அமைப்பாக இருப்பது, நெறிமுறையற்ற அறிக்கையிடல் போன்ற சவால்களை எதிர்கொள்ளும் ஊடக நடைமுறையை மேம்படுத்த உதவும் என்று தீபகற்ப ஊடகவியலாளர்கள் சங்கத்தின் செயலாளர் தெஹ் அதிரா யூசோப் கூறினார்.
மக்களவையில் அங்கீகரிக்கப்பட்ட மலேசிய ஊடக கவுன்சிலை (எம்எம்எம்) நிறுவுவது, பத்திரிகைத் துறையில் தொழில்முறை மற்றும் பொறுப்புணர்வை மேம்படுத்த உதவும் என்று அதிரா தெரிவித்தார்.



