
வேல் வேல் விவகாரம் இந்துக்களை மீண்டும் இழிவுபடுத்திய ஜம்ரி வினோத் மீது உடனடி நடவடிக்கை தேவை டத்தோஸ்ரீ சரவணன் வலியுறுத்து.
கோலாலம்பூர், மார்ச் 5-
பேய் பிடித்தவர்கள் மற்றும் போதையில் உள்ளவர்களைப் போல் வேல் வேல் என கோஷமிடுகிறார்கள் என்று சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜம்ரி வினோத் கூறியிருப்பதை ம.இ.கா தேசிய துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் கடுமையாக சாடியுள்ளார்.
ஜம்ரி வினோத் தொடர்ச்சியாக இதுபோன்ற பலவற்றை செய்து வருகிறார். இக்குற்றங்கள் மலேசியாவின் பல மத சமூகத்தின் மீதான முழுமையாக உணர முடியாமல் போகிறது. இது மதத்தின் மரியாதை இல்லாததைக் காட்டுகின்றன என்று டத்தோஸ்ரீ சரவணன் கூறினார்.
ஜம்ரி வினோத் வார்த்தைகள் இந்து நம்பிக்கை, அதன் கலாச்சாரம் பாரம்பரியத்திற்கு நேரடி அவமானமாகும்.
ஜம்ரி இந்து மதத்தை அவமதிப்பது இது முதல் முறை அல்ல. பலமுறை அவ்வாறு செய்திருக்கிறார்.
ஆகையால் அவர் மீது விரைவாக வழக்குத் தொடரப்படுவதை உறுதி செய்யுமாறு உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் கக்ககநசுதியோனை டத்தோஸ்ரீ சரவணன் கேட்டுக் கொண்டார்.
ஜம்ரி வினோத் ஒவ்வொரு முறையும் இதுபோன்ற புண்படுத்தும் கருத்துக்களைச் சொல்லும்போது, பொறுப்பைத் தவிர்க்க பலவீனமான சாக்குகள் சொல்கிறார். இந்த முறை இது முடிவுக்கு வர வேண்டும். சமூகத்தில் நல்லிணக்கத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலைநிறுத்த உறுதியான நடவடிக்கை அவசியம் என்று டத்தோஸ்ரீ சரவணன் தெரிவித்தார்.
தைப்பூசத்தின் போது இந்துக்கள் வேல் வேல் என்று கோஷமிடுவதை பேய் பிடித்தவர்கள் அல்லது போதையில் உள்ளவர்களுடன் ஒப்பிட்ட சர்ச்சைக்குரிய சமய போதகர் ஜம்ரி வினோத் மீது நடவடிக்கை அவசியமாகும் என்று தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம். சரவணன் குறிப்பிட்டுரழள்ளார்.
டத்தோஸ்ரீ சரவணன் பத்துமலை தைப்பூசத்தில் ஆண்டுதோறும் காவடி ஏந்தி நேர்த்திக் கடனை பூர்த்தி செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.



