Malaysia

பினாங்கு மாநிலத்தில் மீலாது தின விழாவில் ஏராளமானோர் பங்கேற்பு

பினாங்கு,செப்.20-
பினாங்கு லீகா‌ முஸ்லிம்‌ சங்கத்தின்‌ ஏற்பாட்டிலான மீலாது நபி தின‌ பேரணி நேற்று ஜார்ச்டவுனில் சிறப்பாக நடைபெற, அதில் வழக்கம்‌ போல் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

சுமார்‌ 30 இயக்கங்கள், சங்கங்கள் இந்த மீலாது தின பேரணியில் அணிவகுப்புடன் நடந்தனர்.

25ஆம்‌‌ ஆண்டாக‌ நடத்தப்படும்‌ இந்த விழாவில்‌ பினாங்கு லீகாஸ முஸ்லிம் நேர்த்தியாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

பினாங்கு லீகா முஸ்லிம் சங்கம் இந்த வருடம் 70ஆம் ஆண்டை கடந்திருக்கும் பட்சத்தில் இந்த வருடம் மீலாது பேரணி சிறப்பு வாய்ந்தது என பினாங்கு லீகா முஸ்லிம் கெளரவ‌ செயலாளர் நோர் முகமட் பின்‌ எஸ்.பி.கே முகமட்‌ அப்துல்லா‌ கூறினார்.

இந்த பேரணியில்‌ பங்கேற்ற சங்கங்கள், இயக்கங்கள், பள்ளிவாசல்கள்‌‌ உட்ப‌ட‌அனைவருக்கும் நன்றி‌ என்றார்.

கப்பித்தான்‌ பள்ளிவாசலில் இந்த பேரணி‌ தொடங்கியது. நபி‌‌ முகம ட்‌அவர்களின் பிறந்த தினமே மீலாது விழா என்றார்.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button