
Malaysia
பூர்வ குடி கிராமத்தில் இணைய செயற்க்கைக்கோள் சேவை!
தேசம் செய்திகள் சாரா
ஈப்போ, ஆக-22
தம்புன் நாடாளமன்ற உலு கிந்தா சட்டமன்ற தொகுதி கம்போங் சுங்கை தொங்காங் பூர்வ குடியினர் இணைய செயற்க்கைக்கோள் சேவையை பெற்றதில் மகிழ்ச்சி கொண்டு அதனை ஏற்பாடு செய்த தம்புன் நாடாளமன்ற உறுப்பினர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராகிம் அவர்களின் உரிய
நேர உதவிக்கு நன்றி
தெரிவித்து கொண்டனர்.
பிரதமரான அவரின் 2023 ஆம் ஆண்டு வருகையின்
பயனாக இந்த சேவை பெற்ற மட்டற்ற மகிழ்ச்சியில்
இருப்பதாக தெரிவித்தனர்.
இந்த இணைய சேவை அறிமுகமானது நாட்டுநடப்பு, வெளிநாட்டு தகவல்கள் தெரிந்து கொள்வதோடு கிராமத்தில் காணப்படும் சுற்றுலா தளங்களை அறிமுகம் செய்து வைக்க வாய்ப்பு கிட்டியுள்ளதை வரவேற்று பேசினர்.



